SELANGOR

சிலாங்கூர் அரசாங்கத்தின் பொருளாதார நிர்வகிப்பு வாக்காளர்களை ஈர்க்கும்

சுங்கை புசார், ஆகஸ்ட் 10: பொருளாதாரத்தை நிர்வகிப்பதிலும் பாதுகாப்பதிலும் சிலாங்கூர் அரசாங்கத்தின் சிறந்த செயல்திறன், மாநிலத்தின் வடக்கில் உள்ள வாக்காளர்களின் இதயங்களை வெல்ல முடியும் என்று நம்பப்படுகிறது.

நகரம் அல்லது கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்காகப் பல்வேறு திட்டங்ளை உருவாக்கிய டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் கீழ் மாநிலத்தின் செயல்திறனில் குடியிருப்பாளர்கள் திருப்தி அடைவதாக முகமட் யாஹ்யா மாட் சாஹ்ரி அல்லது பாக் யா கூறினார்.

“மாநிலத்தின் வடக்குப் பகுதி வேகமாக வளர்ச்சியடைந்து வருவதாக குடியிருப்பாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். இது இந்தப் பகுதி மக்களுக்குப் பல நன்மைகளைத் தருகிறது.

அனைத்து தரப்பு மக்களும் முன்னேற்றத்தின் பயன்களை உணர அரசின் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. மேலும், பெர்மாதாங், சுங்கை புரோங், செகிஞ்சன், சுங்கை பஞ்சாங் மற்றும் சபாக் ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் கைவிடப்பட மாட்டார்கள்,” என்று ஈஜோக்கின் வேட்பாளர் கூறினார்.

தஞ்சோங் கராங், சுங்கை பெசார் மற்றும் சபாக் பெர்ணம் ஆகிய இடங்களில் அவர் சந்தித்த வாக்காளர்கள், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உள்ளூர் சமூகத்திற்கு நல்ல சேவைகளை வழங்கத் தவறியது குறித்தும் புகார் அளித்ததாக அவர் கூறினார்.

அதனால்தான், குறிப்பாக வளர்ச்சித் திட்டங்கள், அடிப்படை வசதிகள் போன்றவற்றை எளிதாக்கும் வகையில், மத்திய அரசுடன் ஒத்துப்போகும் வேட்பாளரை தேர்வு செய்யுமாறு வாக்காளர்களிடம் கூறினேன்.


Pengarang :