SELANGOR

நவம்பரில் வெள்ளப்பெருக்கு பிரச்சனை தீர்க்கப்படும் – சுங்கை துவா தொகுதி

கோம்பாக், ஆகஸ்ட் 10: இந்த நவம்பரில் தாமான் செலாயாங், பத்து கேவ்ஸ்யில் மேற்கொள்ளப்பட்டுள்ள வெள்ளத் தணிப்பு திட்டம் நிறைவடைந்த பிறகு சுங்கை துவா தொகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்குப் பிரச்சனை தீர்க்கப்படும்.

நீர்த்தேக்கம் கட்டப்படுவதற்கு முன்பாகவே அப்பகுதியில் பணிமனைகளை நகர்த்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“அங்கு நேற்று வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளம் ஏன் இன்னும் ஏற்படுகிறது என்று மக்கள் விமர்சிக்கிறார்கள். எங்களின் வெள்ளத் தணிப்பு திட்டம் இன்னும் முடிவடையாததால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது என்பதை நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.

டத்தாரான் சுங்கை துவாவில் நடந்த #ArusMerahKuning @Sungai Tua நிகழ்வில் பேசியபோது சுங்கை துவா தொகுதியின் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் இவ்வாறு கூறினார்.

இதற்கிடையில், சுங்கை துவா தொகுதியில் உள்ள வாக்காளர்கள் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வாக்களிக்கச் சென்று, அவரை பிரதிநிதியாகத் தொடர்ந்து தேர்ந்தெடுப்பார்கள் என்று சிலாங்கூர் ஹராப்பான் தலைவர் நம்புகிறார்.

“கடந்த காலத்தைப் போலவே தொடர்ந்து எனக்கு ஆதரவளித்து, நம்பிக்கையுடன் இருங்கள். சிலாங்கூர் மற்றும் சுங்கை துவாவை நாங்கள் நிச்சயமாகத் தொடர்ந்து சிறப்பாகக் கொண்டு வருவோம்,” என்று அவர் கூறினார்.


Pengarang :