NATIONAL

சிலாங்கூரிலுள்ள வாக்குச் சாவடிகளில் துணை ஐ.ஜி.பி. ஆய்வு

காஜாங், ஆக 12- சிலாங்கூர் மாநிலத்தில் இன்று தேர்தல் சமூகமான
முறையில் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக மாநிலத்திலுள்ள
வாக்குச் சாவடிகளில் தேசிய போலீஸ் படைத் துணைத் தலைவர்
டத்தோஸ்ரீ ஆயோக் கான் மைடின் பிச்சை ஆய்வினை மேற்கொண்டார்.

வாக்களிப்பு சீரான முறையிலும் சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டும்
நடைபெறுவதை உறுதி செய்வதற்காகக் காஜாங் மாவட்டப் போலீஸ்
தலைவர் ஏசிபி முகமது ஜைட் ஹசானுடன் பண்டார் பாரு பாங்கி தேசியப்
பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியை அவர் காலை 8.15 மணிக்கு
பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து செராஸ், பெரிம்புன் தேசிய இடைநிலைப்பள்ளி
மற்றும் கோலாலம்பூர், ஸ்ரீ கிராமாட் தேசியப் பள்ளியில் உள்ள வாக்குச்
சாவடிகளுக்கும் அவர் வருகை புரிந்தார்.

வாக்குச் சாவடிகளில் வாக்களிக்க காத்திருந்த வாக்காளர்களுடன் ஆயோப்
கான் உரையாடியதோடு மூத்த குடிமக்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வசதிகளையும் பார்வையிட்டார்.

இதனிடையே, வாக்குச்சாவடிகளின் நிலவரம் குறித்து நிருபர்கள் வினவிய
போது, இதுவரை வாக்களிப்பு முறையாகவும் சீராகவும் நடைபெறுவதாக
அவர் சொன்னார்.

பண்டார் பாரு பாங்கி தேசியப் பள்ளியில் உள்ள வாக்களிப்பு மையத்தில்
வாக்காளர்கள் காலை 7.00 மணி முதல் வரிசையில் காத்திருப்பது
பெர்னாமா மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்தது.


Pengarang :