SELANGOR

சிலாங்கூரில் மூன்றில் இரு மடங்கு இடங்களை ஹராப்பான்-பாரிசான் வெல்லும்- அமிருடின் நம்பிக்கை

கோம்பாக், ஆக 12- இன்று நடைபெறும் மாநிலத் தேர்தலில் மூன்றில் இரு
மடங்கு இடங்களைப் பெற்று ஒற்றுமை அரசு ஆட்சியமைக்கும் என்று
தாம் 80 விழுக்காட்டு நம்பிக்கையைக் கொண்டுள்ளதாக மந்திரி புசார்
கூறினார்.

சிலாங்கூரில் போட்டியிடும் 56 தொகுதிகளில் 40 அல்லது 41 தொகுதிகளை
பக்கத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் கூட்டணி கைப்பற்ற
முடியும் என்று தாம் நம்புவதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

வாக்குச் சாவடிகளுக்கு வரும் வாக்காளர்கள் குறிப்பாக மலாய்க்கார்களின்
விழுக்காடு அதிகரிப்பை கருத்தில் கொண்டு 41 இடங்களை பிடிக்க
முடியும் என 70 முதல் 80 விழுக்காடு வரை நம்பிக்கையை
கொண்டுள்ளோம் என்றார் அவர்.

கடந்த 12 முதல் 13 நாள் பிரசாரத்தில் இயன்ற வரை நாங்கள் முயன்று
விட்டோம். இன்றைய தினமே மாநலத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்
போகிறது. மூன்றில் இரு மடங்கு பெரும்பான்மையைத் தக்க வைத்துக்
கொள்ள முடியும் என நாங்கள் நம்புகிறோம் என அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக அவர், தாமான் டெம்ப்ளர் தொகுதியில் வாக்களிப்பதற்காகத்
தனது துணைவியார் டத்தின்ஸ்ரீ மஸ்டியானா முகமதுவுடன் செலாயாங்
பாரு, சீன தேசிய மாதிரி பள்ளிக்குக் காலை 8.24 மணியளவில் வந்தார்.


Pengarang :