SELANGOR

சிலாங்கூரில் பச்சை அலை கட்டுப்படுத்தப்பட்டது- மந்திரி புசார் கூறுகிறார்

ஷா ஆலம், சிலாங்கூர் மாநிலத்தில் அரசை பக்கத்தான் ஹராப்பான்
கூட்டணி மீண்டும் ஆட்சியை அமைப்பதற்குரிய சாத்தியம்
ஏற்பட்டுள்ளதால் ஒற்றுமை அரசாங்கத்திற்கு எதிராக மலாய்க்காரர்கள்
மத்தியில் இருப்பதாகக் கூறப்படும் அதிருப்தியினால் எழுந்த பச்சை அலை
அடங்கி விட்டதாகச் சிலாங்கூர் பக்கத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி கூறினார்.

பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணி 22 இடங்களை வென்றதால் மாநில
சட்டமன்றத்தில் 34 இடங்களை மட்டுமே பெற்று மூன்றில் இரு மடங்கு
பெரும்பான்மையை பக்கத்தான் ஹராப்பான் இழந்துள்ள நிலையில்
டத்தோஸ்ரீ அமிருடின் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த தேர்தலில் 38 தொகுதிகளைக் கைப்பற்றும் தங்களின் இலக்கை
அடைவதற்கு ஏதுவாக கூடுதலாக நான்கு இடங்களை வெல்லும்
வாய்ப்பினை பக்கத்தான்-பாரிசான் கூட்டணி நழுவ விட்டதாக அமிருடின்
சொன்னார்.

நாம் தோற்ற தொகுதிகளை, குறிப்பாக மாநிலத்தின் தென் பகுதியை
கவனித்தால் நாம் கடுமையான போட்டியை வழங்கியுள்ளதோடு 2,000க்கும்
குறைவான வாக்கு எண்ணிக்கையில்தான் தோல்வியைத் தழுவியுள்ளோம்
என்றார் அவர்.

இது தவிர இதர நான்கு தொகுதிகளான டெங்கில், கோம்பாக் செத்தியா,
சுங்கை காண்டீஸ், தாமான் ஆகியவற்றை நாம் 600 முதல் 700 வாக்குகள்
வேறுபாட்டில்தான் இழந்துள்ளோம். நாம் ஒன்று அல்லது இரண்டு
விழுக்காட்டு வாக்கு வேறுபாட்டில்தான் வெற்றியைத் தவற விட்டோம்
என்று அவர் மேலும் கூறினார்.

இந்த நான்கு தொகுதிகளிலும் தேர்தல் முடிவை ஆட்சேபித்து தேர்தல்
ஆணையத்திடம் மனுவை தாக்கல் செய்வது குறித்து வழக்கறிஞர்களுடன்
கலந்தாலோசிக்கவுள்ளோம் என அமிருடின் தெரிவித்தார்.


Pengarang :