SELANGOR

மாநில அரசின் மலிவு விற்பனை செய்வாய்கிழமை மீண்டும் தொடரும்

ஷா ஆலம், ஆக 13- அத்தியாவசிய
உணவுப் பொருள்களை சந்தையைவிட
குறைவான விலையில் வழங்கும் ஏசான்
ரஹ்மா மலிவு விற்பனை வரும்
செவ்வாய்க்கிழமை தொடங்கி ஒன்பது
இடங்களில் மீண்டும் நடைபெறும்.

சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக்
கழகத்தினால் நடத்தப்படும் இந்த மலிவு
விற்பனை மாநிலத் தேர்தல் காரணமாக
கடந்த ஆகஸ்டு 12 முதல் நாளை வரை
தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம்
தொடங்கப்பட்ட இந்த மலிவு விற்பனை
அடுத்தாண்டு இறுதி வரை தொடரும்
என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி அண்மையில்
கூறியிருந்தார்.

மாநில அரசின் இந்த மலிவு விற்பனைக்கு
உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச்
செலவின அமைச்சும் ஆதரவு வழங்கி
வருகிறது என்றும் அவர்
தெரிவித்திருந்தார்.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி
10.00 வெள்ளிக்கும் மாட்டிறைச்சி ஒரு
பிறாக்கெட் 10.00 வெள்ளிக்கும் பி கிரேட்
முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் கெம்போங்
மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5
கிலோ சமையல் எண்ணெய் 25.00
வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00
வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.


Pengarang :