NATIONAL

வாக்குச் சீட்டை பத்திரிகையாளர்களிடம் காட்டிய விவகாரம்- சனுசி விசாரணைக்கு அழைக்கப்படுவார்

கோலாலம்பூர், ஆக 15 – மாநிலத்
தேர்தலுக்கான வாக்குப்பதிவு தினத்தன்று
ஊடகவியலாளர்களிடம் குறியிடப்பட்ட
தனது வாக்குச் சீட்டைக் காண்பித்ததற்காக
கெடா மந்திரி புசார் டத்தோஸ்ரீ முகமது
சனுசி முகமது நோர் போலீசாரால்
விசாரணைக்காக அழைக்கப்படவுள்ளார்.

அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளைத்
தொடரலாமா என்பது குறித்து சட்டத்
துறைத் தலைவர் அலுவலகத்தின் முடிவுக்கு
நாங்கள் விட்டுவிடுவோம் என்று தேசிய
போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ
ரஸாருடின் ஹூசேன் கூறினார்.

தேர்தல் குற்றச் சட்டம் 1954ன் பிரிவு 5(1)
மற்றும் 26(1)(ஜி) ஆகியவற்றின் கீழ் இந்த
வழக்கு விசாரிக்கப்படும் என்று அவர்
சொன்னார்.

கடந்த சனிக்கிழமையன்று குறியிடப்பட்ட
தனது வாக்குச்சீட்டை ஊடகங்களுக்கு
வேண்டுமென்றே அம்பலப்படுத்தவில்லை
என்றும் மாறாக, புகைப்படங்களுக்குப் போஸ்
கொடுக்கும் போது தற்செயலாக அதை வெளிப்படுத்தியதாகவும் சனுசி
விளக்கமளித்திருந்தார்.

– பெர்னாமா


Pengarang :