SELANGOR

தாமான் ஸ்ரீ பெராப்பாட்டில் மலிவு விற்பனை- சுமார் 300 பேர் பங்கேற்று பயனடைந்தனர்

கிள்ளான், ஆக 17- இங்குள்ள தாமான் ஸ்ரீ பெராப்பாட்டில் இன்று காலை
நடைபெற்ற ஏசான் ரஹ்மா மலிவு விற்பனையில் சுமார் 300 பேர் பங்கு
கொண்டு அத்தியாவசிய உணவுப் பொருள்களை வாங்கிச் சென்றனர்.

இங்கு விற்கப்படும் சமையல் பொருள்கள் தரமானவையாகவும்
மலிவானவையாகவும் இருந்த காரணத்தால் அதிகமானோர் இந்த
விற்பனையில் கலந்து கொண்டதாக தொகுதி ஒருங்கிணைப்பாளர் அப்துல்
ரஹ்மான் அகமது கூறினார்.

இந்த விற்பனை ஒருபோதும் ஏமாற்றத்தை அளித்ததில்லை. இங்கு
வந்தவர்களில் பெரும்பாலோர் ஏற்கனவே ஒரு முறைக்கும் மேல்
வந்தவர்களாவர் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

வழக்கத்தைக் காட்டிலும் புதிதாக சில பொருள்கள் இம்முறை
விற்பனைக்கு வைக்கப்பட்டது இந்த விற்பனையின் சிறப்பு அம்சமாக
இருந்தது என்று அவர் சொன்னார்.

இந்த விற்பனை வாய்ப்பை சுற்றுவட்டார பொது மக்கள் தவறவிடக்
கூடாது என்பதற்காக வாட்ஸ்ஆப் மூலம் இந்த விற்பனை தொடர்பில்
விளம்பரம் செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, இன்றைய விற்பனையில் கோழி மற்றும் முட்டைக்கு
அமோக வரவேற்பு இருந்ததாக சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக்
கழகத்தின் அதிகாரி முகமது ஷியாமி அஸ்மாவி சலோவுடின் கூறினார்.

இன்றைய விற்பனையில் 200 தட்டு முட்டை, 500 கோழி, 108 போத்தல்
சமையல் எண்ணெய், 300 மூட்டை அரிசி, 200 பாக்கெட் மீன் ஆகியவற்றை
ஏற்பாடு செய்திருந்தோம் என்றார் அவர்.


Pengarang :