SELANGOR

தொழில்நுட்பத் துறைகளில் கல்வியைத் தொடர அழைப்பு

ஷா ஆலம், 17 ஆகஸ்ட்: சிலாங்கூரைச் சேர்ந்த 16 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் சிலாங்கூர் தொழில்நுட்பத் திறன் மேம்பாட்டு மையத்தில் (STDC) தொழில்நுட்பத் துறைகளில் தங்கள் கல்வியைத் தொடர அழைக்கப்படுகிறார்கள்.

தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி பயிற்சியின் (TVET) செப்டம்பர் மாத அமர்வின் மூன்றாம் நிலையில் குளிரூட்டி சம்பந்தப்பட்ட படிப்பை வழங்குகிறது என முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

சிலாங்கூர் ஸ்மார்ட் டெக்னிக்கல் ஸ்கில்ஸ் அண்ட் எக்ஸ்பெர்டைஸ் திட்டத்தின் (IKTISASS) நிதியுதவியுடன் இரண்டாம் நிலை பேஷன் டிசைன் கல்வியிலும் மாணவர்கள் பங்கேற்கலாம்.

“செப்டம்பர் 2023 அமர்வுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் இன்னும் திறக்கப்பட்டுள்ளன,” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏதேனும் கேள்விகள் இருந்தால் 03-3281 2621, 60193424111 மற்றும் 601157535792யைத் தொடர்பு கொள்ளவும் அல்லது https://forms.gle/eZChSRUS5gjpxFjAA என்ற இணைப்பின் மூலம் பதிவு செய்யவும்

சிலாங்கூர் தொழில்நுட்பத் திறன் மேம்பாட்டு மையம் என்பது மாநில அரசின் கீழ் உள்ள ஒரு தொழில்நுட்ப கல்வி நிறுவனமாகும், இது பல்வேறு தரமான திறன் பயிற்சிகளை வழங்குகிறது மற்றும் தொழில்துறை 4.0 இல் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.


Pengarang :