SELANGOR

சிறு தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் டாருல் எஹ்சான் வணிக நிதி திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்

ஷா ஆலம், ஆகஸ்ட் 17: டாருல் எஹ்சான் வணிக நிதித் திட்டத்தின் (நாடி) மூலம் சிறு தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்கு யாயாசன் ஹிஜ்ரா சிலாங்கூர் (ஹிஜ்ரா) RM5,000 வரை வழங்குகிறது.

இந்த மூலதன நிதியுதவி அனைத்து வணிகத் துறைகளுக்கும் மற்றும் சிலாங்கூர் மக்களுக்கும் வழங்கப்படும். மேலும், இந்த நிதி திட்டத்திற்கு பெண்கள் கூட விண்ணப்பிக்க ஊக்குவிக்கப் படுகிறார்கள் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

“இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான நிபந்தனைகளில் ஒன்று விண்ணப்பதாரர்கள் 18 முதல் 65 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் மற்றும் சிலாங்கூரில் வாக்களிப்பவர்களாக இருத்தல் வேண்டும். இத்திட்டத்திற்கு அதிகமான பெண்கள் விண்ணப்பித்தால் சிறப்பாக இருக்கும்,” என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

இணையத்தில் விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள், http://mikrokredit.selangor.gov.my/ ஐப் பார்வையிடவும் அல்லது உங்களுக்கு அருகிலுள்ள 19 ஹிஜ்ரா கிளைகளைத் தொடர்பு கொள்ளவும்

சிலாங்கூர் பட்ஜெட் 2023 இல் ஹிஜ்ரத் திட்டத்தை மேம்படுத்தவும், தொழில் முனைவோரின் வளர்ச்சிக்கு உதவவும் RM130 மில்லியன் ஒதுக்கப்பட்டது.

நாடியைத் தவிர்த்து ஐ-பிசினஸ், ஐ-பெர்மூஸிம், ஹீரோ டூ ஹீரோ, நியாகா டாருள் ஏசான் (நாடி) கோ டிஜிட்டல், ஐ-லெஸ்தாரி மற்றும் ஐஅக்ரோ ஆகிய வர்த்தக கடனுதவித் திட்டங்களையும் ஹிஜ்ரா அறிமுகப்படுத்தியுள்ளது.


Pengarang :