SELANGOR

மாநிலத்தின் வருமானம் வெ.200 கோடியைத் தொட்டது

ஷா ஆலம், ஆக 22- சிலாங்கூர் கடந்த வாரம் 200 கோடி வெள்ளி வருமானத்தைப் பதிவு
செய்து இந்த ஆண்டிற்கான வருமான இலக்கை எட்டிவிட்டது என்று மந்திரி புசார்
கூறினார்.

இவ்வாண்டிற்கான வருமான இலக்கு நான்கு மாதங்களுக்கு முன்னர் அடையப்பட்ட
நிலையில் இவ்வாண்டு இறுதிக்குள் இந்த தொகை 250 கோடி வெள்ளியாக உயரும்
என எதிர்பார்க்கப்படுவதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மாநிலப் பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்ட வருமான இலக்கை கடந்த
வெள்ளிக்கிழமையுடன் எட்டிவிட்டோம்.  இந்த போக்கு வரும் ஆகஸ்டு மற்றும்
செப்டம்பர் மாதங்களில் தொடர்ந்தால் சிறந்த உபரி வருமானத்தைப் பெறுவோம் என்று
நான் நம்புகிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய சூழ்நிலையைப் பின்பற்றினால் நமது வருமானம் குறைந்த பட்சம் 230 கோடி
வெள்ளி முதல் 240 கோடி வெள்ளி வரை இருக்கும் என்று மதிப்பிடுகிறோம். அதே
சமயம் 250 கோடி வெள்ளி வருமானத்தைப் பெறுவதும் சாத்தியமற்றது அல்ல.
இருந்தாலும், நான் அதிக எதிர்பார்ப்பைக் கொண்டிருக்க விரும்பவில்லை என்றார்
அவர்.

இன்று காலை இங்குள்ள ஜூப்ளி பேராக் மண்டபத்தில் நடைபெற்ற அரசு
ஊழியர்களுடனான கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதனைத்
தெரிவித்தார்.

மாநிலம் சேவைத் துறைக்கு மாறியதைத் தொடர்ந்து இறக்குமதி மற்றும் ஏற்றுமதி
முதலீடு பொருளாதாரம் மாற்றத்தைச் சந்தித்ததாக அமிருடின் கூறினார்.

கோவிட்-19 பரவிய காலத்தில் மாநிலத்தின் பொருளாதாரம் சரக்கு போக்குவரத்து மற்றும்
விநியோகத் துறைகளைச் சார்ந்து இருந்ததாகக் கூறிய அவர், அந்த இரண்டு
துறைகளும் தொடர்ந்து பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வருவதாக விளக்கினார்.


Pengarang :