SELANGOR

எதிர்காலத்தில் இரண்டு மணிநேர வாகன நிறுத்துமிடம் விரிவுபடுத்த திட்டம்

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 29: பயனர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து எதிர்காலத்தில் இரண்டு மணிநேர வாகன நிறுத்துமிடம் திட்டத்தை விரிவுபடுத்த பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (எம்பிபிஜே) திட்டமிட்டுள்ளது.

செக்‌ஷன் 52, செக்‌ஷன் 14 மற்றும் SS21, டமன்சாரா உத்தாமா ஆகிய இடங்களில் செயல்படுத்தப்பட்ட 495 இரண்டு மணிநேர வாகன நிறுத்துமிடங்கள் தற்போது பயனர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறன என முகமட் அஸான் முகம் அமீர் கூறினார்.

“பயனர்களிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த வரவேற்பு மிகவும் சாதகமாக இருந்தது. தொடக்கத்தில் முதல் கட்ட அறிவிப்பு வெளியிடப்பட்ட பொழுது புகார்கள் வந்தன, ஆனால் இப்போது அதை பொதுமக்கள், குறிப்பாக வணிகர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

“எனவே, பெட்டாலிங் ஜெயாவில் அதன் தேவை இருப்பதால், இரண்டு மணிநேர வாகன நிறுத்துமிடத்தை அதிகரிக்க பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி திட்டமிட்டுள்ளது,” என்று அவர் இன்று உள்ளூர் அதிகாரசபையின் தலைமையகத்தில் எம்பிபிஜேயின் மாதாந்திர கூட்டத்திற்குப் பிறகு கூறினார்.

இதற்கிடையில், எந்தவொரு தரப்பினரும் அவர்களின் வணிக வளாகத்திற்கு முன்னால் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் வண்ணம் தீட்டி பயனடைய வேண்டாம் என்றும் அவர் நினைவூட்டினார்.

“இந்த மோசடி செயல் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி வருமானத்தை பாதிக்கிறது, ஏனெனில் அது கவுன்சிலுக்குச் செலுத்த வேண்டிய லாபத்தை எடுத்துக்கொள்கிறது. பொது இடங்களுக்கு இடையூறு விளைவித்ததற்காக அவர்கள் கட்டிட சாலை சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படலாம்,” என்று அவர் கூறினார்.


Pengarang :