SELANGOR

நான் கேட்டேன், பிரதமர் கொடுத்தார் என அரசியல் நாடகம் நடத்துவதை நிறுத்துங்கள்! அமைச்சர் சிவகுமார் ஆவேசம்

கிள்ளான், செப் 6- நான் கேட்டேன், பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராஹிம் இந்திய பாரம்பரிய
தொழில் துறைகளுக்கு அந்நிய
தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி
கொள்ள உடனடியாக அனுமதி வழங்கி
விட்டார் என்று அரசியல் நாடகம்
நடத்துவதை நிறுத்தி கொள்ளுங்கள் என்று
சம்பந்தப்பட்டத் தரப்பினருக்கு மனித வள
அமைச்சர் வ. சிவகுமார் எச்சரிக்கை
விடுத்துள்ளார்.

முன்பு பல ஆண்டுகளாக அமைச்சரவையில்
இருந்தார்.

அப்போது இந்த இந்த பிரச்சனைக்கு தீர்வு
காணவில்லை.
அப்போது என்ன செய்து கொண்டிருந்தார்
என்று அவர் கேள்வியெழுப்பினார்.

நான் மனிதவள அமைச்சராக பொறுப்பேற்ற
பின் இந்திய பாரம்பரிய தொழில் துறைகள்
எதிர் நோக்கிய அந்நிய தொழிலாளர்கள்
பிரச்சனைக்கு தீர்வு காண 9 மாதங்களாக
போராடி இருக்கிறேன்.

உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின்
நசுத்தியோன் மற்றும் உள்நாட்டு வாணிப
வாழ்க்கை செலவின அமைச்சர் டத்தோஸ்ரீ
சாலாவுடின் ஆயோப் ஆகியோருடன்
நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி இரு
அமைச்சுகளின் ஒப்புதல் பெற்றேன்.

மூன்று அமைச்சுகள் நடத்திய சந்திப்பு

வழி அமைச்சரவை ஒப்புதல் பெறுவதற்கு
எல்லா நடவடிக்கைகளையும் எடுத்தேன்.
இதுதான் உண்மை நிலவரம்.

இரண்டு அமைச்சர் மற்றும் அதன்
அதிகாரிகளிடம் நடத்திய சந்திப்புக்கான
ஆவணங்கள் எல்லாம் உள்ளன.

ஆனால் இப்போது பேசினேன், உடனே
பிரதமர் அனுமதி கொடுத்து விட்டார் என்று
அரசியல் நடத்துவது மிகவும் வேதனையாக
இருக்கிறது. நான் ஒற்றுமே செய்யவில்லை.
இவர் தான் செய்தார் என்று மலிவான
முறையில் அரசியல் நாடகம் நடத்தி
கொண்டிருக்கிறார்.

இவர் நினைத்திருந்தால் அமைச்சராக இருந்த
போதே இந்திய பாரம்பரிய தொழில்
துறைகளுக்கு தீர்வு

கண்டிருக்கலாம்.
ஆனால் எதுவுமே செய்யவில்லை.
14 ஆண்டுகளாக இந்திய பாரம்பரியத்
தொழில் துறையினர் அந்நிய தொழிலாளர்கள்
இல்லாததால் பரிதவித்தார்கள்.

அப்போது இந்த பிரச்சனை இவரின்
கண்களுக்கு தெரியவில்லையா?
எதுவுமே தீர்வு செய்யவில்லை.
இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்கு
விடிவுகாலம் பிறந்ததும் அதற்கு நான்தான்
காரணம் என்று அரசியல் நடத்தி
கொண்டிருக்கிறார்.

அமைச்சராக இருந்த காலத்தில் எதுவும்
செய்யாதவர் இப்போது விளம்பரத்திற்காக
நாடகம் நடத்துவதை நிறுத்தி கொள்ள
வேண்டும் என்று அமைச்சர் சிவகுமார்
கேட்டுக் கொண்டார்.

இன்று கிள்ளானில் இந்திய பாரம்பரிய
தொழில் துறையினரை நேரடியாக சந்தித்து
மனித வள அமைச்சர் சிவகுமார் கருத்துகளை
கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :