NATIONAL

டேவான் நெகாரா தலைவரின் டெலிகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது

கோலாலம்பூர், செப் 7 – டேவான் நெகாரா தலைவர் டான்ஸ்ரீ வான் ஜுனைடி துவாங்கு ஜாபரின் டெலிகிராம் கணக்கு கடந்த சில நாட்களாகப் பொறுப்பற்ற நபரால் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், மேல் நடவடிக்கைக்காகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

தன்னிடமிருந்து வரும் அழைப்புகள் அல்லது செய்திகள், குறிப்பாக நிதி விஷயங்கள் அல்லது சந்திப்பு ஏற்பாடுகள் சம்பந்தப்பட்டவைகளால் ஏமாற வேண்டாம் என்று  வான் ஜுனைடி மக்களுக்கு நினைவூட்டினார்.

“அத்தகைய செய்திகள் அல்லது அழைப்புகளைப் பெறும் எவரும், சரிபார்ப்புக்காக எனது அலுவலகத்தை 03-26017610 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த ஹேக்கரின் செயலால் நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். மேலும் இதுபோன்ற மோசடிகளால் பொதுமக்கள் எளிதில் ஏமாற மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

“பல்வேறு சமூக ஊடகப் பயன்பாடுகள் மூலம் நிகழும் மோசடிகள் குறித்து மேலும் விழிப்புடன் இருக்கவும், அத்தகைய ஹேக்கர்களின் செயல்களை அதிகாரிகளுக்கு தெரிவிக்கவும் பொதுமக்களை நான் அறிவுறுத்த விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :