SELANGOR

கெப்போங்கிலிருந்து அம்பாங் வரையிலான சாலை மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன

ஷா ஆலம், செப்டம்பர் 7: கெப்போங்கிலிருந்து அம்பாங் வரையிலான ஜாலான் லிங்கரன் தெங்கா 2 (எம்ஆர்ஆர்2) இன் சாலையை  சரிசெய்தல் மற்றும் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன.

நேற்று இரவு 8 மணிக்குப் பழுதுபார்க்கும் பணி நிறைவடைந்து, பாதை முழுமையாகப் பயனர்களுக்கு திறக்கப்பட்டது என்று கோம்பாக் பொதுப்பணித் துறை (ஜேகேஆர்) முகநூலில் அறிக்கை ஒன்றின் மூலம்

அறிவித்தது.

மதியம், 1 மணிக்குத் துவங்கிய பழுதுபார்ப்பு பணி, ‘பாக்ஸ் கல்வர்ட்’ மூடியை மாற்றி, சீரமைக்கும் பணியுடன் நிறைவடைந்துள்ளது,” என்றார்.

கெபோங்கிலிருந்து அம்பாங் வரையிலான எம்.ஆர்.ஆர்.2 வழித்தடத்தில் கிட்டத்தட்ட ஒரு மீட்டர் ஆழத்தில் துளை ஒன்று சாலையில் ஏற்பட்டது. இது உடைந்த ‘ஸ்லாப் கோராசிங் கல்வர்ட்’ மூடி காரணமாக ஏற்பட்டது என நேற்று, ஜே.கே.ஆர் கோம்பாக் தெரிவித்தது.

இச்சம்பவத்தால் இரண்டு கிலோமீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் அம்பாங் நோக்கி செல்லும் பயனர்கள் சீரான பழுதுபார்க்கும் பணிக்காக டுத்தா-உலு கிள்ளான் எக்ஸ்பிரஸ்வேயின் (டியூக்) மாற்று வழியைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டனர்.


Pengarang :