NATIONAL

உடல் உறுப்பு தானம் செய்ய மக்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர் – சுகாதார அமைச்சு

புத்ராஜெயா, செப் 7: ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு ஓர் உறுப்பு தானம் செய்பவர் என்ற இலக்கை எதிர்காலத்தில் அடைய சுகாதார அமைச்சகம் (MOH) எதிர்பார்க்கிறது என்று அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா கூறினார்.

“தற்போதைய விகிதம் ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு 0.7 நன் கொடையாளர்களாக உள்ளது. அதனால், உடல் உறுப்பு தானம் செய்ய அதிகமானவர்களை ஊக்குவிக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன,” என்று அவர் கூறினார்,

மேலும் தற்போது 370,130 உறுப்பு தான உறுதிமொழிகள் பெறப்பட்டுள்ளன நிலையில் அவற்றில் 22,268 இவ்வாண்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.

இன்று 2023ஆம் ஆண்டுக்கான தேசிய உறுப்பு தான விழிப்புணர்வு வாரத்தை நடத்திய பின்னர் ஊடகங்களிடம் பேசிய டாக்டர் ஜலிஹா, மலேசியர்களிடையே உறுப்பு தானம் செய்யும் விகிதம் இன்னும் குறைந்த அளவில் உள்ளது என்றார்.

“மாற்றுச் சிகிச்சைக்கான காத்திருப்புப் பட்டியலில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கைக்கு இடையே குறிப்பிடத்தக்க இடைவெளி உள்ளது,” என்று அவர் கூறினார்.

உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக டாக்டர் ஜாலிஹா கூறினார்.

– பெர்னாமா


Pengarang :