NATIONAL

அரசியல் தலைவர்கள் ஒற்றுமை உணர்வை கடைப்பிடிக்க வேண்டும்

ஷா ஆலம், செப் 26: ஒருமித்த கருத்து மற்றும் சமூக நல்வாழ்வை மேம்படுத்துவதில் அரசியல் தலைவர்கள் ஒற்றுமை உணர்வைக் கடைபிடிக்க வேண்டும்.

மக்களை அணுகும் போது மத அல்லது இனம் போன்ற அம்சங்களை பயன்படுத்துவதை விட ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்துவது நேர்மறையான விளைவைக் கொண்டிருப்பதாகக் போர்ட் கிள்ளான் தொகுதி பிரதிநிதி கூறினார்.

“நாம் பல இனத்தவர்கள். பன்மைத்துவ மிக்க சமூகம். மக்களை ஒன்றிணைத்து பெருமை அடைவது எப்படி என்று சிந்திப்பது நல்லது. “அரசியல் போட்டா  போட்டிகள் பற்றி மட்டும் சிந்திக்காமல், அடுத்த தலைமுறையைப் பற்றியும் சிந்தியுங்கள்.

இதற்கிடையில், தேர்தல் காலம் கடந்து விட்டதால், தலைவர்கள் உணர்ச்சிகரமான பிரச்சனைகளை ஒதுக்கிவிட்டு, மக்கள் நலனில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று ஶ்ரீ செர்டாங் மக்கள் பிரதிநிதி அப்பாஸ் அஸ்மி கூறினார்.

“இன, மத வேறுபாடின்றி அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் உதவ வேண்டிய நேரம் இது.

“வளர்ச்சியில் கவனம் செலுத்துங்கள். சிலாங்கூரில் பல்வேறு இனங்கள் மற்றும் மதங்கள் உள்ளன. நாம் முன்னேற வேண்டும்,” என்று அவர் கூறினார்.

மாட்சிமை தங்கிய  சிலாங்கூர்  சுல்தான்   செப்டம்பர் 12 அன்று அரசியல் தலைவர்களுக்கு   விடுத்த  அழைப்பில்  தனிப்பட்ட இலாபத்திற்க்காகவும் மக்களிடத்தில்   அரசியல்  ஆதரவைப் பெற மதத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று  அறிவுறுத்தினார்


இந்த நாட்டில் உள்ள மக்களின் ஒற்றுமையைக் காக்க, பொறுப்பற்ற முறையில் ஃபத்வா வழங்கும் செயல் நிறுத்தப்பட வேண்டும் என்றும் சுல்தான் அவர்கள் வலியுறுத்தினார்.


Pengarang :