SELANGOR

கழிவுகளை –  தொழில்   துறைக்கான  ஆற்றலாக மற்றும் நுட்பத்தில் கவனம் செலுத்தப்படும்

ஷா ஆலம், செப் 26: கழிவுகளை –  தொழில் துறைக்கான  ஆற்றலாக மற்றும் நுட்பத்தில் மாநிலம்  கவனம்  செலுத்தும். அது மாநில பொருளாதாரத்தில் ஏற் படுத்தவுள்ள  தாக்கம் காரணமாக எதிர்காலத்தில் அதில் கவனம் செலுத்தப்படும்.

இந்த விஷயம் 2018 முதல் வலியுறுத்தப்பட்டு வருவதாகவும், தொழில்துறையின் ஆய்வு மற்றும் சாத்தியக்கூறுகள் கூட சமீபத்தில் உள்ளூர் அதிகாரிகளின் (PBT) பிரதிநிதிகளுடன் விவாதிக்கப் பட்டதாகவும் டத்தோ மந்திரி புசார் கூறினார்.

“இந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நாங்கள் செயல்படுத்திய உத்திகளில் இதுவும் ஒன்று. அடுத்த ஆண்டு 2024 பட்ஜெட் மூலம் இதைச் செயல்படுத்த முடிந்தால், உயர் மதிப்புமிக்க மறுசுழற்சி பொருளாதாரத்தை உருவாக்க முடியும்.

“இந்தத் தொழில்நுட்பம் புதிய ஆற்றலை உற்பத்தி செய்து, மின் நுகர்வை குறைக்கும். எங்கள் திறன்களை இந்த புதிய கார்ப்பரேட் இமேஜ் மற்றும் காம்பாக்டர் லாரி திட்டம் அதிகரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்

பாரம்பரிய கிராமப் பகுதிகளில் குப்பை சேகரிப்பு தொடர்பாக மாற்று வழிகளை அல்லது புதிய யுக்திகளையோ தனது தரப்பு ஆராய்ந்து வருவதாகவும் அமிருடின் கூறினார்.


Pengarang :