SELANGOR

அக்டோபரில் ஏற்படும் இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ள தயார் – சுபாங் ஜெயா மாநகராட்சி

சுபாங் ஜெயா, செப் 27: இந்த அக்டோபரில் எதிர்பார்க்கப்படும் மழைக்காலத்தின் போது ஏற்படக்கூடிய இடர்களை எதிர்கொள்ள சுபாங் ஜெயா மாநகராட்சி தயாராகி வருகிறது.

மனித வளங்கள், அவசரகால ஏற்பாடுகள், தளவாட பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை ஏற்பாடு செய்வதில் தனது தரப்பு கவனம் செலுத்துகிறது என்று அதன் மேயர், முகமட் ஃபௌசி முகமட் யாதிம் கூறினார்.

“எம்பிஎஸ்ஜே மற்ற நகராண்மைகளைப் போலவே, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய இடர்பாடுகளை சமாளிப்பதற்கான அவசர ஏற்பாடுகளை வழங்குகிறது,“ என்று அவர் இன்று எம்பி எஸ் ஜே கழகத்தின் முழு கூட்டத்தின் போது கூறினார்

அச்சமயம் சுபாங் ஜெயா வில் பதிவு செய்யப்பட்டுள்ள டிங்கி நோயாளிகளின் புள்ளிவிவரங்களை முகமட் ஃபௌசி பகிர்ந்து கொண்டார், அதாவது 5,936 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஒப்பிடும்போது 41.2 சதவீதம் அதிகமாகும் (3,492 சம்பவங்கள்) .

“குடியிருப்பாளர்கள் வாரத்திற்கு ஒரு முறை 10 நிமிடங்கள் செலவிட அறிவுறுத்தப்படுகிறார்கள். எம்பிஎஸ்ஜே உள்ளிட்ட ஏடிஸ் இனப்பெருக்கம் செய்யும் இடங்களைத் தேடி அழிக்க மாவட்ட சுகாதார அலுவலகத்துடன் இணைந்து தொற்றுநோய் கட்டுப்பாடு மற்றும் மருந்து தெளித்தல் ஆகியவை செயல்படுத்தப்படுகின்றன,” என்று அவர் கூறினார்.


Pengarang :