SELANGOR

தனியார் நிறுவனங்களுக்கு நிகராக அறிவு மற்றும் திறன் ஆகியவற்றை கொண்டிருக்க மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு அழைப்பு

ஷா ஆலம், செப் 27: தனியார் நிறுவனங்களுக்கு நிகராக அறிவு மற்றும் திறன் ஆகியவற்றை கொண்டிருக்க இந்த மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு டத்தோ மந்திரி புசார் அழைப்பு விடுத்தார்.

குழுப்பணி உணர்வை வெளிக்கொணரவும், கூட்டாக முயற்ச்சித்து பணிகளை  நிறைவு செய்ய  இந்த முயற்சி அவசியம் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“அவர்கள் அறிவு, தகவல், திறன் மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் லாபத்தை நோக்கமாகக் கொண்ட தனியார் மட்டத்தில் உள்ளவர்கள் உடன் ஒப்பிட பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

கடந்த திங்கட்கிழமை ஜகார்த்தாவில் யுனிவர்சிட்டாஸ் பரமார்டினா நகரில் தனது பணிப் பயணத்தில் போது ஆற்றிய விரிவுரையில் அவர் இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்வில் இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில் முனைவோர் துறை பொறுப்பு உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹலிமியும் கலந்து கொண்டார்.

அரசு ஊழியர்கள் தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுவதுடன், பணிகளை  ஆக்ககரமாக  செயல்படுத்துவதில், மற்ற நாடுகளின் அடைவு நிலைகள் கருத்தில்   கொள்ளப்பட  வேண்டும்.  அவர்களின் முன்னுதாரணங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் அமிருடின் கேட்டுக் கொண்டார்.

“மலேசியாவில் உள்ள அளவுகோல்களை  மட்டும் பார்க்காமல், மற்ற ஆசிய நாடுகளில் உள்ள சகா  அரசு பணியாளர்களின்  சேவை திறனும்  கருத்தில் கொள்ளப்பட வேண்டும். இது நாம் உள்ளூர்களில்  எதிர்கொள்ளும்  சவால்களை  சந்திக்க  உதவும்.

“ஜகார்த்தா, பாண்டுங், சிங்கப்பூர்,பேங்காக் மற்றும் பிற இடங்களில் உள்ள  சகாக்களின்  சாதனைகளை  அறிந்துக்கொள்ளும்  மற்றும்  அதில் போட்டியிடும்  மனப்பான்மை அவசியம் என்று வலியுறுத்தினார்.


Pengarang :