SELANGOR

ஈஜோக், தாமான் சூரியா வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வு காண நடவடிக்கை

ஷா ஆலம், செப் 27- ஈஜோக், தாமான் சூரியா குடியிருப்பு பகுதி மக்கள்
எதிர்நோக்கி வரும் வெள்ளப் பிரச்சனை வட்டாரத் தலைவர்களின்
கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த குடியிருப்புப் பகுதிக்கு நேற்று வருகை புரிந்த கோல சிலாங்கூர்
பி.கே.ஆர். தொகுதித் தலைவர் தீபன் சுப்பிரமணியம் மற்றும் கோல
சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜூல்கிப்ளி அகமதுவின்
சிறப்பு அதிகாரி நட்ஸ்ரில் பீடின் ஆகியோரிடம் வட்டார மக்கள் தாங்கள்
எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தாங்கள் எதிர்நோக்கி வரும் இந்த
வெள்ளப் பிரச்சனை தொடர்பில் குடியிருப்பாளர் சங்கத்தின் பிரதிநிதிகள்
சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்களிடம் தங்களின் மனக்குமுறல்களை
முன்வைத்தனர்.

இந்த பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் மாநிலவடிகால் மற்றும்
நீர்பாசனத் துறை, நகராண்மைக் கழகம் மற்றும் தொடர்புடைய அரசு
துறைகளின் பிரதிநிதிகள் மற்றும் குடியிருப்பாளர்களை உள்ளடக்கிய
கலந்துரையாடல் நிகழ்வுக்கு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்
அலுவலகம் சார்பில் ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக தீபன் தெரிவித்தார்.

இந்த தாமான் சூரியா குடியிருப்பு பகுதியில் சுமார் 150 குடும்பங்கள்
உள்ளன. அதில் வசிப்போரில் கிட்டத்தட்ட 80 விழுக்காட்டினர்
இந்தியர்களாவர்.


Pengarang :