SELANGOR

தேர்ந்தெடுக்கப்பட்டப் போக்குவரத்துக் குற்றங்களுக்கு வெ.10.00 அபராதம்- எம்.பி.எஸ்.ஜே. வழங்குகிறது

ஷா ஆலம், அக் 2-  தேர்ந்தெடுக்கப்பட்ட போக்குவரத்து குற்றங்களுக்கு முழுமையானதீர்வை வழங்கும் வகையில் 10.00 வெள்ளி என்ற சமநிலையான அபராதச் சலுகையை சுபாங் ஜெயா மாநகர் மன்றம் வழங்குகிறது.

மாநகர் மன்றத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவையொட்டி   அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை  இந்தச் சலுகை வழங்கப்படுவதாக மாநகர் மன்றம் தனது முகநூல் பதிவில் கூறியது.

போஸ்டரில் இடம் பெற்றுள்ள குற்றங்களைத் தவிர இதர போக்குவரத்துக் குற்றங்களுக்கான  அபராதத்தைச் செலுத்தும் அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள் என்று அது தெரிவித்தது.

தடைசெய்யப்பட்ட நேரங்கள் மற்றும் பகுதிகளில் கனரக வாகனங்களை ஓட்டியது, 
அமலாக்க அதிகாரிகளால் வாகனங்கள் இழுத்துச் செல்லப்பட்டது மற்றும் செயல்படாத அல்லது கைவிடப்பட்ட வாகனங்கள் மீதான நடவடிக்கைகள் உள்ளிட்ட  குற்றங்களுக்கு இந்த நிலையான 10.00 வெள்ளி அபராதம் பொருந்தாது.

அதோடு மட்டுமின்றி, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வாகன நிறுத்துமிடங்களை  தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்களை 
பழுதுபார்த்தல் அல்லது கழுவுதல் ஆகியவை குற்றங்களுக்கும் இந்தச் சலுகை வழங்கப்படாது.

இது தவிர, அனுமதிக்கப்படாத இடங்களில் வாகனங்களை நிறுத்துவது, மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது போன்றக் குற்றங்களுக்கும் இந்த சலுகைத் திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்த சலுகை தொடர்பான மேல் விவரங்களுக்கு  www.mbsj.gov.my என்ற இணையதளத்தைப் வலம் வரலாம்.

Pengarang :