NATIONAL

இன்று நண்பகல் வரை பந்திங், பெ.ஜெயாவில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு

ஷா ஆலம், அக் 2- இன்று நண்பகல் 12.00 நிலவரப்படி சிலாங்கூரின் ஐந்து
பகுதிகளில் காற்று மாசுக் குறியீடு (ஐ.பி.யு.) ஆரோக்கியமற்ற நிலையில்
பதிவாகியுள்ளதாக மலேசிய காற்று மாசுக் குறியீட்டு மேலாண்மை முறை
தெரிவித்துள்ளது.

ஷா ஆலம் மற்றும் பந்திங்கில் காற்றின் ஐ.பி.யு. தரக் குறியீடு 156ஆகப்
பதிவான வேளையில் பெட்டாலிங் ஜெயாவில் 155ஆகவும் ஜோஹான்
செய்தியாவில் 151ஆகவும் கிள்ளானில் 134ஆகவும் இருந்ததாக அந்த
மேலாண்மை அகப்பக்கம் கூறியது.

மேலும், புத்ராஜெயா (155 ஐ.பி.யு.), கோலாலம்பூரின் பத்து மூடா (151
ஐ.பி.யு.) மற்றும் செராஸில் (163 ஐ.பி.யு.) காற்றின் தரம் ஆரோக்கியமற்ற
நிலையில் உள்ளதாக அது குறிப்பிட்டது.

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் நீலாயில் காற்றின் தரம் 163ஆகவும்
சிரம்பானில் 157ஆகவும் மலாக்காவின் புக்கிட் ரம்பாய் மற்றும் அலோர்
காஜாவில் முறையே 151 மற்றும் 133ஆகவும் பதிவாகியுள்ளது.

0 முதல் 50 வரையிலான ஐ.பி.யு. குறியீடு சிறப்பானதாகவும் 51
முதல் 100 வரையிலான குறியீடு மிதமானதாகவும் 101 முதல் 200
வரையிலானக் குறியீடு ஆரோக்கியமற்றதாகவும 201 முதல் 300
வரையிலானக் குறியீடு மிகவும் ஆரோக்கியமற்றதாகவும் 300 க்கும்
மேற்பட்ட குறியீடு ஆபத்தானதாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

ஆகக்கடைசி ஐ.பி.யு. தரக் குறியீட்டு அளவை அறிந்து கொள்ள
பொதுமக்கள் https://apims.doe.gov.my/home.html என்ற அகப்பக்கத்தைப்
பார்வையிடலாம்.


Pengarang :