NATIONAL

சண்டையில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் எட்டு நபர்கள் கைது

கோலாலம்பூர், அக் 3: நேற்று அதிகாலை கம்போங் மலேசியா தம்பஹானில் கார் இழுக்கும் டிரக் தொழிலாளர்களின் இரு குழுக்கள்

சண்டையில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் எட்டு பேரைக் காவல்துறையினர் கைது செய்தது.

நேற்று காலை 11.15 மணியளவில் 22 முதல் 44 வயதுடைய சந்தேக நபர்கள் அனைவரும் கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றி கைது செய்யப்பட்டதாகச் செரஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ஜாம் ஹலீம் ஜமாலுடின் தெரிவித்தார்.

செரஸ் IPD கட்டுப்பாட்டு மையம் பொதுமக்களிடமிருந்து அதிகாலை 1.37 மணி அளவில் சண்டை பற்றிய தகவலைப் பெற்றது. மேலும் அந்நபர்கள் வாடிக்கையாளர்களைப் பெறுவதற்காகச் சண்டையிட்டுள்ளனர் என ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டது.

“இன்னும் தலைமறைவாக உள்ள மீதமுள்ள சந்தேக நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஆயுதங்களை வைத்திருந்ததற்காகவும், சண்டையில் ஈடுபட்டதற்காகவும் தண்டனைச் சட்டம் பிரிவு 148 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது” என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

“இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் செரஸ் காவல்துறையின் ஹாட்லைன் 03-92845050/5051, கோலாலம்பூர் ஹாட்லைன் 03-21159999 அல்லது அருகிலுள்ள ஏதேனும் காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :