NATIONAL

காற்று மாசுக் குறியீடு (ஏபிஐ) 200ஐத் தாண்டினால் வீட்டிலேயே கற்றல் மற்றும் கற்பித்தல் (பிடிபிஆர்) நடவடிக்கை செயல்படுத்தப்படும்

கெந்திங் ஹைலேண்ட்ஸ், அக் 4: பள்ளிகள் மூடப்பட்டு காற்று மாசுக் குறியீடு (ஏபிஐ) 200ஐத் தாண்டும் போது மட்டுமே வீட்டிலேயே கற்றல் மற்றும் கற்பித்தல் (பிடிபிஆர்) நடவடிக்கை செயல்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் கூறினார்.

எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதற்கு முன், காற்று மாசுக் குறியீட்டைத் தொடர்ந்து கண்காணிக்கும்படி பள்ளியிடம் கேட்டுக் கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

“அனைத்து பள்ளிகளையும் அவ்வப்போது ஐபியு அளவீடுகளை கண்காணிக்கவும், வானிலை பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுறுத்தல்களுக்குக் கீழ்ப்படியவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவர் கூறினார்.

இன்று அமினுடின் பாக்கி நிறுவனத்தில் (IAB) கல்வித் தலைமை மற்றும் மேலாண்மை தொடர்பான மூன்றாவது சர்வதேச மாநாட்டை (ICELAM) நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.

நாட்டில் சில பகுதிகள் முகை மூட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் காற்று மாசுக் குறியீடு அளவீடு 100ஐத் தாண்டினால் வெளிப்புறச் செயல்பாடுகள் எதுவும் மேற்கொள்ளப் படக் கூடாது என்ற நிபந்தனையுடன், வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களுக்குப் பள்ளி இணங்குமாறு நேற்று ஃபட்லினா கேட்டுக் கொண்டார்.

– பெர்னாமா


Pengarang :