NATIONAL

இவ்வாண்டு ஆகஸ்டு வரை 265 தனியார் வீடமைப்புத் திட்டங்களுக்குப் புத்துயிர்

பந்திங், அக் 4 – இவ்வாண்டு ஆகஸ்டு மாத நிலவரப்படி 2,337 கோடி வெள்ளி  மொத்த
மேம்பாட்டு மதிப்பைக் கொண்ட (ஜி.டி.வி.) 256 தனியார் வீடமைப்புத் திட்டங்கள் புத்துயிர்
பெற்றுள்ளதாக ஊராட்சி மேம்பாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.

அந்த வீட்டுத் திட்டங்களில் நிறைவு மற்றும் இணக்கச் சான்றிதழ் (சி.சி.சி.), குடியிருப்புத்
தகுதிச் சான்றிதழ் (சி.எஃப்.ஒ.) அல்லது முன்னேற்ற நிலைக்கு மாற்றப்பட்டத் திட்டங்களும்
அடங்கும் என்று துணை அமைச்சர் அக்மால் நஸ்ருல்லா முகமது நசீர் கூறினார்.

கடந்த ஆகஸ்டு மாத வெற்றி விகிதாசாரத்தின்படி நாங்கள் 34 வீட்டுத் திட்டங்களை
புனரமைத்தோம். அதில் சி.சி சி  தகுதி பெற்ற 27 திட்டங்கள் மற்றும் முன்னேற்ற நிலைக்குத்திரும்பிய ஏழு திட்டங்களும் அடங்கும் என்று  என்று அவர்  நேற்று இங்கு வீடமைப்புஒருங்கிணைந்த மேலாண்மை அமைப்பின்  அறிமுக நிகழ்வுக்கு தலைமையேற்றப்பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பிரச்சனைக்குரிய தனியார் வீடமைப்புத் திட்டப் பணிக்குழுவின் வாயிலாக ஊராட்சி மன்றங்கள், நுட்ப நிறுவனங்கள், தனியார் நிதிக் கழகங்கள் மற்றும் பொதுத் துறை வீடமைப்பு கடனுதவி வாரியம் ஆகிய தரப்புடன் இணைந்து ‘தீர்வு மற்றும் தடுப்பு‘ நடவடிக்கைளை அமைச்சு மேற்கொள்ளும் என்றும் அவர் சொன்னார்.

– பெர்னாமா


Pengarang :