NATIONAL

கிள்ளான் பள்ளத்தாக்கில் ஐ.பி.யு. குறியீடு ஆரோக்கியமற்ற நிலையிலிருந்து விடுபட்டது

ஷா ஆலம், அக் 4- நாட்டில் இன்று காலை காற்றின் தரம்
குறிப்பிட்டத்தக்க அளவு மேம்பாடு கண்டது. கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள
எந்தப் பகுதியிலும் காற்று மாசுக் குறியீடு (ஐ.பி.யு.) ஆரோக்கியமற்ற
நிலையில் பதிவாகவில்லை.

நாடு தழுவிய நிலையில் ஸ்ரீ அமானில் மட்டும் இன்று காலை 10.00
மணிக்கு ஐ.பி.யு. குறியீடு 128ஆகப் பதிவானது. சிலாங்கூர் மாநிலத்தித்ன
அனைத்து ஆறு பகுதிகளிலும் காற்றின் தரம் மிதமான அளவில் உள்ளது.

கிள்ளானில் ஐ.பி.யு. குறியீடு 77 ஆகவும் பந்திங்கில் 75ஆகவும் ஷா
ஆலமில் 71ஆகவும் கோல சிலாங்கூரில் 71 ஆகவும் ஜோஹான்
செத்தியாவில் 71ஆகவும் பத்து மூடாவில் 65ஆகவும் புத்ரா ஜெயாவில்
69ஆகவும் பதிவாகின.

சிலாங்கூர் மாநிலத்தின் பந்திங் மற்றும் பெட்டாலிங் ஜெயாவில் நேற்று
காலை காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் அதாவது முறையே
119 மற்றும் 109ஆகப் பதிவாகியிருந்தது.

0 முதல் 50 வரையிலான ஐ.பி.யு. குறியீடு சிறப்பானதாகவும் 51
முதல் 100 வரையிலான குறியீடு மிதமானதாகவும் 101 முதல் 200
வரையிலானக் குறியீடு ஆரோக்கியமற்றதாகவும் 201 முதல் 300
வரையிலானக் குறியீடு ஆபத்தானதாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.


Pengarang :