SELANGOR

சபாக் பெர்ணம் பகுதியின் (SABDA) வளர்ச்சி திட்டம் உள்ளூர் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தும்

சுபாங் ஜெயா, அக் 4: முதல் சிலாங்கூர் திட்டத்தில் (RS-1) உள்ள சபாக் பெர்ணம் பகுதியின் (SABDA) வளர்ச்சி திட்டம் உள்ளூர் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தும்.

இந்த வளர்ச்சியில் 2025 முதல் செயல்படும் என எதிர்பார்க்கப்படும் ஆறு மெகா திட்டங்களும் அடங்கும். மேலும் அத்திட்டங்கள் பல அதிக ஊதியம் பெறும் வேலை வாய்ப்புகளையும் திறக்கிறது என நகர மற்றும் கிராமப்புற மேம்பாட்டு துறை ஆட்சிக்குழு உறுப்பினர் கூறினார்.

“இந்த மெகா திட்டம் RM1.9 பில்லியன் முதலீட்டை ஈர்த்தது மற்றும் ஏறக்குறைய 3,600 அதிக ஊதியம் பெறும் தொழில்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறிப்பாக சபாக் பெர்ணமைச் சுற்றியுள்ள குடியிருப்பாளர்களின் வருமானத்தை அதிகரிக்க உதவியாக இருக்கும்.

“அதே நேரத்தில், நகரத்திற்குக் குறிப்பாக இளைஞர்கள் இடம்பெயர்வதைக் குறைக்க முடியும்” என்று டத்தோ ரிசாம் இஸ்மாயில் மீடியா சிலாங்கூருக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

“சபாக் பெர்ணம் பகுதியின் மேம்பாடு செயல்படுத்தப்படும், ஆனால் நாங்கள் கிராமப்புறங்களுக்கு இடையூறு விளைவிக்க மாட்டோம். சுற்றுலாவை ஈர்க்கும் இடமாக இப்பகுதியைப் பாதுகாக்க விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

1,317 ஹெக்டேர் நிலத்தின் வளர்ச்சியை உள்ளடக்கிய “SABDA`, சங்காட் மந்திரியில் உள்ள ஸ்மார்ட் சிலாங்கூர் அக்ரோ பார்க், சிகிஞ்சானில் உள்ள உயர் தொழில்நுட்ப மீன்வள மையம் மற்றும் ஆயர் மானிஸ் வணிக மையம் உட்பட ஆறு பெரிய திட்டங்களை உள்ளடக்கியது.


Pengarang :