SELANGOR

சிலாங்கரில் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு

ஷா ஆலம், அக் 9- சிலாங்கூர் மாநிலத்தில் ஏறக்குறைய அனைத்து
இடங்களிலும் இன்று காலை காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்
உள்ள வேளையில் ஒரே இடத்தில் மட்டும் மிதமான அளவில்
பதிவாகியுள்ளது.

இன்று காலை 9.00 மணி நிலவரப்படி பந்திங், கிள்ளான், ஷா ஆலம்,
ஜோஹான் செத்தியா, பெட்டாலிங் ஜெயா ஆகிய இடங்களில் ஐ.பி.யு.
எனப்படும் காற்று மாசுக் குறியீடு முறையே 157, 154, 153, 142 மற்றும்
137ஆகப் பதிவாகியுள்ளது.

சிலாங்கூர் மாநிலத்தைப் பொறுத்த வரை கோல சிலாங்கூரில் மட்டும்
காற்றின் தரம் மிதமான அளவில் அதாவது ஐ.பி.யு. அளவில் 93ஆகப்
பதிவாகியுள்ளது.

செராஸ் மற்றும் கோலாலம்பூரில் ஐ.பி.யு. குறியீடு 157ஆகவும் புத்ரா
ஜெயாவில் 105ஆகவும் உள்ளது.

நாட்டின் இதரப் பகுதிகளிலும் இன்று காலை காற்றின் தரம்
ஆரோக்கியமற்ற நிலையில் காணப்பட்டது. குறிப்பாக மலாக்கா
மாநிலத்தின் புக்கிட் ரம்பாயில் ஐ.பி.யு. குறியீடு 153ஆகவும் நீலாயில்
152ஆகவும் ஜோகூர் பத்து பகாட்டில் 157ஆகவும் பதிவானது.

கடந்த வாரத்தைக் காட்டிலும் இவ்வாரம் நாடு முழுவதும் காற்றின் தரம்
மோசமடைந்துள்ளதை இந்த ஐ.பி.ஐ. குறியீடு காட்டுகிறது.

நாட்டின் காற்றின் தரம் மோசமான நிலையில் காணப்படுவதற்கு
இந்தோனேசியாவே காரணம் என மலேசியா குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த
பிரச்சனைக்கு உடனடித் தீர்வு காணும்படி அந்நாட்டு அரசாங்கத்தை
இயற்கை வளம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர் நிக்
நஸ்மி நிக் அகமது வலியுறுத்தியுள்ளார்.


Pengarang :