NATIONAL

மோசடிக்கு எதிரான  போராட்டத்திற்கு  அரசாங்கம் RM 10 மில்லியன் கூடுதல் ஒதுக்கீடு  செய்துள்ளது

கோலாலம்பூர்,13 அக்: மோசடி குற்றங்களை எதிர்த்துப் போராடுவதில் அதன் செயல்பாட்டை மேலும் அதிகரிக்க, தேசிய மோசடி மறுமொழி மையத்தின் (NSRC) ஒதுக்கீட்டை, RM20 மில்லியனாக அரசாங்கம் உயர்த்தும்.

நிதியமைச்சராக இருக்கும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அடுத்த ஆண்டு இந்த ஒதுக்கீடு விநியோகிக்கப்படும் என்றார்.

“பேங்க் நெகாரா மலேசியா நிதித் துறையுடன் இணைந்து தேசிய மோசடி தடுப்பு  போர்ட்டலை (NFP) உருவாக்கி வருகிறது,

இது 2024 ஆம் ஆண்டின் மத்தியில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று அவர் இன்று   நாடாளுமன்றத்தில் மலேசிய மடாணி பட்ஜெட் 2024ம்  சமர்ப்பிக்கும் போது கூறினார்.

இதன்வழி,  நிதி கண்காணிப்பு தானியங்குபடுத்தும் திறனுடன், போர்ட்டல் கண்காணிப்பு, முடக்கம் மற்றும் நிதி திரும்பப்   பெறும் காலத்தை விரைவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது என்று அன்வார் கூறினார்.

மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தைத் திருப்பித் தரும் செயல்முறையை விரைவுபடுத்த சிண்டிகேட்டுகள் மற்றும்  ஏமாற்று குற்றத்தை  மற்றவரகள் சுமக்க (கழுதை கணக்கு) வைத்திருப்பவர்களுக்கு எதிராக   நடவடிக்கை எடுக்க, குற்றவியல்  நடைமுறைச் சட்டம் உள்ளிட்ட சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் தொடர்புடைய நிறுவனங்கள் பரிசீலித்து வருவதாக அவர் கூறினார்.


Pengarang :