NATIONAL

திவால் மீதான  இரண்டாவது வாய்ப்பு அடுத்த ஆண்டு அமல்

கோலாலம்பூர், அக் 13: மக்களின் நலனை பாதுகாப்பதற்கான ஒற்றுமை அரசாங்கத்தின் கொள்கையின்படி, திவாலான அவர்களுக்கு மறு வாய்ப்பு வழக்கும் கொள்கை அடுத்த ஆண்டு முதல் RM200,000 கடனைத் தாண்டாத 40 வயதுக்கு  குறைவான இளைஞர்களுக்கு விரிவு படுத்தப் படும்.

கடந்த ஜூலை மாதம் வரை, 50,000 ரிங்கிட் க்கும் குறைவான சிறு கடன்களுடன் கிட்டத்தட்ட 14,000 திவாலான வழக்குகள் உள்ள நிலையிலிருந்து விடுவிக்கப் பட்டுள்ளன என பிரதமர் தெரிவித்தார்.

“இரண்டாவது வாய்ப்புக் கொள்கையை அமல்படுத்தியதன் விளைவாக, திவாலான நிலை (திருத்தம்) சட்டம் 2023, நிபந்தனைகளைக் கொண்ட தற்போதைய மற்றும் கடந்த கால திவால் வழக்குகளுக்கு அறிவிப்பிலிருந்து தானாகவே விலக வாய்ப்பு வழங்கும் ” என்று டேவான் ராக்யாட்டில் 2024 பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும் போது அவர் கூறினார்.

இதற்கிடையில், பொது சட்ட உதவித் துறையின் செயல்பாடுகளை வலுப்படுத்த, கூடுதலாக 10 மில்லியன் ரிங்கிட் அதற்கு ஒதுக்கப் பட்டிருப்பதாகவும்   நிதி அமைச்சரான அன்வார் கூறினார்.

“வேலைவாய்ப்பு மோசடி சிண்டிகேட்டுகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள பிற பொதுநல வழக்குகளில் பாதிக்கப்படுபவர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :