2024 பட்ஜெட்டில் மித்ராவுக்கு வெ.10 கோடி, வழிபாட்டு தலங்களுக்கு வெ.5 கோடி, தெக்குன் திட்டத்திற்கு வெ.3 கோடி!

கோலாலம்பூர், அக். 13- பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அனைத்து இனங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பட்ஜெட் என்று மனித வள அமைச்சர்
வ. சிவகுமார் தெரிவித்தார்.

இந்திய சமுதாயத்தின் பொருளாதார மேம்பாடு உருமாற்ற திட்டம் என்று கூறப்படும் மித்ராவுக்கு 10 கோடி வெள்ளி மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. TEKUN (தெக்குன்)  எனப்படும் இந்தியர்கள் சம்பந்தப்பட்ட சிறுதொழில் கடனுதவி திட்டத்திற்கு 3 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்களுக்கு இரண்டாவது முறையாக பட்ஜெட்டில் ஐந்து கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கக் கூடியது என்று அமைச்சர் சிவகுமார் சொன்னார்.

வறுமை ஒழிப்புத் திட்டத்திற்கு இந்த பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் வழங்கப் பட்டுள்ளது.கல்வி மேம்பாடு தொழில் துறை, உணவு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.ஒட்டுமொத்தத்தில் இது அனைத்து இனங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பட்ஜெட் என்று அவர் சொன்னார்.


Pengarang :