NATIONAL

பழங்குடி மக்களின் தேவைகளையும் நலனையும் பூர்த்தி செய்ய RM 333 மில்லியன்

ஷா ஆலம், அக் 13: அடுத்த ஆண்டு பழங்குடி மக்களின் நலன விருத்திக்கு அரசாங்கம் மொத்தம் RM333 மில்லியனை ஒதுக்கும். அது பழங்குடி சமூகத்தின் தேவைகள் மற்றும் நலன்கள்  மீது தொடர்ந்து கவனம் செலுத்தும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், RM28 மில்லியன் தொழில் முனைவோர் மேம்பாட்டு  திட்டத்தை   தீவிரப்படுத்தும், உலு லங்காட் மற்றும் பேராக்கின்  பத்தாங் படாங்கில் உள்ள பழங்குடி மக்களின் பண்ணைகளை மீண்டும் நடவு செய்யவும் பயன்படுத்தப்படும் என்றார்.

“ஒதுக்கீடுகளில் சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்துதல், பழங்குடி மக்களின் கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக உதவி வழங்குதல் ஆகியவை அடங்கும்” என்று அவர் 2024 பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது கூறினார்.


Pengarang :