SELANGOR

தீபாவளி பற்று சீட்டுக்கு ஆர்.எம். 4.4 மில்லியன் 22 ஆயிரம் இந்துக்களுக்கு

செய்தி சு .சுப்பையா
ஷா ஆலம்.அக்.16-  சிலாங்கூரில் வசிக்கும் இந்தியர்களுக்குப் பல்வேறு திட்டங்களை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த பல ஆண்டுகளாகப் பி.40 பிரிவைச் சேர்ந்த சிலாங்கூர் இந்தியர்களுக்குத் தீபாவளி கொண்டாட்டத்திற்கான  ஆர்.எம்.100.00 பற்று சீட்டு வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் இவ்வாண்டு இத்தொகை ரிம. 200.00 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று சிலாங்கூர் மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயிடு தெரிவித்தார்.
சிலாங்கூரில் மொத்தம் 56 சட்ட மன்ற தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் 40,000 திற்கும்  மேற்பட்ட இந்திய வாக்காளர்களை கொண்ட தொகுதி செந்தோசா தொகுதியாகும். ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள இந்திய வாக்காளர்கள் எண்ணிக்கையை முன் வைத்து இந்த தீபாவளி பற்று சீட்டு ஒதுக்கப் படுகிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் 300 முதல் 600 வரை ஒதுக்கப்பட்டுள்ளது. சிலாங்கூர் முழுவதும் மொத்தம் 22,000 இந்திய குடுபங்கள் இத்திட்டத்தில் பயன் அடைவர்.
இந்துக்கள் தீபாவளியை சிறப்பாகக் கொண்டாட இந்த பற்று சீட்டு வழங்கப்படுகிறது. இந்த பற்று சீட்டின் வழி மது பானங்கள், பட்டாசு போன்ற ஆடம்பர பொருட்கள் வாங்க முடியாது.
இத்திட்டத்தில் பங்கு பெற முன்பு ரிங்கிட் மலேசியா 2,000.00த்திக்கும் குறைவான குடும்ப வருமானம் இருக்க வேண்டும். தற்போது சிலாங்கூர் மாநில மக்களின் மாதந்திர வருமானம் அதிகரித்து விட்டது. இதனால் குடும்ப வருமானம் ரி.ம. 3,000.00 குறைவானவர்கள் இத்திட்டத்தில் பங்கு பெறலாம் என்று அவர் கூறினார்.
சட்ட மன்ற உறுப்பினர் கீழ் உள்ள நகராண்மை கழக உறுப்பினர்கள், இந்திய சமுதாய தலைவர்கள் வழி நடத்துவார்கள். இந்த பற்று சீட்டு வழங்கும் நிகழ்ச்சியில் நானும் கலந்து சிறப்பிப்பேன்.
நவம்பர் 4 ஆம் தேதி கிள்ளான் செட்டி பாடாங் வட்டாராத்தில் சிலாங்கூர் மாநில அளவிலான தீபாவளி உபசரிப்பு நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கு மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் சாரி தலைமை தாங்குவார். சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள், நகராண்மைக் கழக உறுப்பினர்கள், இந்திய சமுதாயத் தலைவர்கள் மற்றும் பொது மக்களும் திரளாக வந்து கலந்து சிறப்பிப்பார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கிறேன்  என்றார் அவர்.
இத்தருணத்தில் தீபாவளி கொண்டாடும் அனைத்து இந்துக்களுக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

Pengarang :