NATIONAL

அந்நிய தொழிலாளர்கள்   பிரச்சனைக்கு தீர்வு காண விரைவில் மனித வளத்துறை அமைச்சருடன் சந்திப்பு

ஷா ஆலம்.அக்.16-  அந்நிய தொழிலாளர்களால் சிலாங்கூர் மாநிலத்தில் பல்வேறு பிரச்னைகள் எழுகின்றன. மார்கெட்டுகள், மளிகை கடைகள், பழைய இரும்பு தொழில் வியாபாரம் போன்ற துறைகளில் நாட்டு குடி மக்களுக்கு பெரும் சவாலாக  அந்நிய தொழிலாளர்கள் இருக்கின்றனர். இப்பிரச்சினை குறித்து முறையாக பேசி தீர்வு காண மலேசிய மனித வளத்துறை அமைச்சர் சிவக்குமார் அவர்களை  தான் சந்திக்க உள்ளதாக   மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயிடு தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலத்தின் மனித வளத்துறை ஆட்சிக் குழு உறுப்பினராக பாப்பாராயிடு பொறுப்பை ஏற்றுள்ளார்.  அந்நிய தொழிலாளர்கள் மலேசியர்களுக்கு பெரும் மிரட்டலாக உருவெடுத்து வருகின்றனர். குறிப்பாக வியாபாரத்தில் சட்டவிரோதமாக   ஈடுபடுகின்றனர். ஆனால் இவர்களுக்கு  மலேசியர்கள் தான் மறைமுகமாக எல்லா உதவிகளும் செய்து வருகின்றனர்.

அந்நிய தொழிலாளர்களை கொண்டு வரும் நிறுவனங்கள்  அதன் தொழிலாளர்களுக்கு முறையான வீட்டு வசதி செய்து கொடுக்க வேண்டும். மேலும் இவர்கள் வியாபாரத்தில் ஈடுபட முடியாது.  ஆனால் புறநகர் பகுதிகளில் மளிகை கடை நடத்தி வருகின்றனர். இதே போல் நகர் பகுதிகளில் உள்ள மார்கெட்டுகளும் அவர்களின் கட்டுப் பாட்டுக்குள் இருக்கின்றன.

பழைய இரும்பு வியாபார தொழிலிலும் இந்தியர்களுக்கு பெரும் மிரட்டலாக உருவெடுத்து வருகின்றனர்.  இதனால் மலேசியர்களுக்குத் தொழில் மற்றும் பொருளாதார ரீதியில் பெரும் மிரட்டலாக உருவெடுத்து வருகின்றனர்.

மேலும் பலர் அங்கீகாரம் இல்லாத தொழில் துறைகளிலும் ஈடு பட்டு வருகின்றனர். இப்பிரச்சனையாவும் விரைவில் தீர்வு காண வேண்டும்.

இதற்காக ஒரு நடவடிக்கை குழுவும் அமைக்கப்பட வேண்டும். சிலாங்கூரில் அமைக்கப் படும் நடவடிக்கை குழுவிற்குத் தலைமை ஏற்க நான் தயார் என்று அவர் கூறினார்.

சிறப்பான வரவு செலவு திட்டத்தைக்  கொண்டு வந்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு  வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.


Pengarang :