NATIONAL

போர்ப் பயிற்சியில் ஈடுபட்டு வந்த மாணவர் வெப்பத் தாக்குதலால் உயிரிழப்பு

ஜொகூர் பாரு, அக் 16: இராணுவப் போர் பயிற்சி மைய முகாமில் (புலாடா) இளம்
அதிகாரிகளுக்கான போர்ப் பயிற்சியில் ஈடுபட்டு வந்த மாணவர், வெப்பத் தாக்குதலால்
கடந்த சனிக்கிழமை உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இங்குள்ள சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்கு (HSI) 24 வயதான அம்மாணவர்
தீவிர சிகிச்சைக்காக அனுப்பப்பட்டதாக ஜொகூரின் உடல்நலம் மற்றும் ஒற்றுமைக்
குழுவின் தலைவர் லிங் தியான் சூன் கூறினார்.

அதே நாளில் முகாமின் இலக்கு மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ​​ மாலை
5.30 மணி முதல் 6 மணி வரை நடந்த சம்பவத்தில் 10 மாணவர்கள் ஹீட் ஸ்ட்ரோக்
அறிகுறிகளால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

"இன்னும் இரண்டு பங்கேற்பாளர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று
வருகின்றனர், மற்ற ஏழு பேர் கோத்தா திங்கி மருத்துவமனையில் வழக்கமான வார்டில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் அவர்கள் நிலையாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது," என்று அவரை
இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

– பெர்னாமா


Pengarang :