NATIONAL

புக்கிட் ஜுக்ரா, கோலா லங்காட் சாலையைப் பயன்படுத்த பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

ஷா ஆலம், அக் 17: மலையோரப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து நேற்று முதல் புக்கிட் ஜுக்ரா, கோலா லங்காட் சாலையைப் பயன்படுத்த பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

வாகனங்கள் சாலையை பயன்படுத்த தடை  இரண்டு மாதங்களுக்கு அமலில் இருக்கும் என கோலா லங்காட் நகராண்மை கழகம் தெரிவித்துள்ளது.

‘’வாகனங்கள் சாலையை பயன்படுத்த தடை  அக்டோபர் 16 முதல் அமலுக்கு வருகிறது. பொதுப்பணித்துறை சார்பில், பாதுகாப்பை முதன்மைப்படுத்தி, பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,” என முகநூலில் தெரிவிக்கப்பட்டது.

அப்பகுதியில் ஓய்வு நடவடிக்கைகளில் ஈடுபடும் பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பை கவனித்துக் கொள்ளவும். தற்போதைக்கு அப்பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்கவும்  அந்நிறுவனம் நினைவூட்டியது.


புக்கிட் ஜுக்ரா ஹேங் கிளைடிங் அல்லது பாராகிளைடிங் நடவடிக்கைகளுக்குப் பிரபலமானது. இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் ஓர் இடமாகும்.


Pengarang :