SELANGOR

சுங்கை கபாய் பொழுதுபோக்கு வனத்தை மறுசீரமைப்பிற்கான முயற்சி – டுசுன் துவா பிரதிநிதி

ஷா ஆலம், அக் 17: உலு லங்காட்டில் 2021 இல் ஏற்பட்ட வெள்ளத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட சுங்கை கபாய் பொழுதுபோக்கு வனத்தை மறுசீரமைப்பிற்கான முயற்சிகள் டுசுன் துவா பிரதிநிதியின் கவனத்தை ஈர்த்துள்ளது

உல்லாசப் பயணங்களுக்குப் பெயர் போன இவ்விடம் தற்போது வெறிச்சோடி காணப்படுவதாகவும், அங்குள்ள வியாபாரிகளின் வாழ்வாதாரம் கூட பாதிக்கப்பட்டுள்ளதாகவும் டத்தோ ஜோஹான் அப்துல் அஜீஸ் கூறினார்.

“இப்போதெல்லாம் மக்கள் அங்கு வருகை புரிகிறார்கள், ஆனால் முன்பு போல் சிறப்பாக இல்லை. அதற்குக் காரணம் முன்பு போல் வியாபாரிகளும் வசதிகளும் அங்கு இல்லாததால் இருக்கலாம்.

“கழிப்பறைகள் மற்றும் பல பொது கட்டமைப்புகள்  வசதிகள் சேதமடைந்துள்ளன. எனவே, எனது தரப்பு இது தொடர்பான அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது, அதை டத்தோ மந்திரி புசாரிடம் (டத்தோஸ்ரீ அமிருதின் ஷாரி) சமர்ப்பிக்கப்படும்.

“இங்குள்ள சூராவும்  மாநில அரசின் ஒதுக்கீட்டில் கட்டப்பட்டதாக  நான் அறிகிறேன். எனவே, இதனை  பழுதுபார்க்கும் பணியை உடனடியாக செய்ய நானும் உழைக்கிறேன்,” என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

அவர் ஏற்கனவே சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங்குடன் ஒரு சந்திப்பை நடத்தி, அப்பகுதியில் மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகளின் அவசியத்தை வெளிப்படுத்தினார்.

சுங்கை கபாய் தவிர, டுசுன் துவா பகுதியில் குறிப்பாக வடக்குப் பகுதியில், குனோங் நுவாங், சுங்கை மங்கிஸ், சுங்கை சொங்காக் மற்றும் சுங்கை பாங்சுன் போன்ற இயற்கை இடங்களைக் கொண்டுள்ளது.


Pengarang :