NATIONAL

2024 பட்ஜெட் சாரம்சங்களை அரசு இயந்திரங்கள் மக்களுக்கு விளக்க வேண்டும்- பிரதமர் வேண்டுகோள்

புத்ராஜெயா, அக் 17- நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட 2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் சாரம்சங்களை அரசாங்க இயந்திரங்கள் மக்களுக்கு விளக்க வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்த 2024 வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரத்திற்கும் கல்விக்கும் அரசாங்கம் முன்னுரிமை அளிப்பதற்கான காரணத்தை மக்களுக்கு விளக்க வேண்டியது அவசியமாகும் என்று அவர் சொன்னார்.

விளக்கமளிப்பு மிகவும் முக்கியமானது. இது குறித்து மக்களுக்கு விரிவாக விளக்கப்பட வேண்டும் என்று இன்று இங்கு நடைபெற்ற நிதியமைச்சின் மாதாந்திர ஒன்று கூடும் நிகழ்வில் உரையாற்றும் போது அவர் தெரிவித்தார்.

“பொருளாதாரச் சீர்திருத்தம், மக்களுக்கு அதிகாரமளித்தல் எனும் கருப்பொருளில் 2024 மடாணி வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சருமான அன்வார் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார்.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் கல்வியமைச்சுக்கு மிக அதிகமாக அதாவது 5,870 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ள வேளையில் அதற்கு அடுத்து சுகாதார அமைச்சு 4,120 கோடி வெள்ளியைப் பெற்றுள்ளது.

முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையையும் பொது மக்களுக்கு அதிகபட்ச  சௌகர்யத்தை யும் வழங்கும் நோக்கில் தாக்கல் செய்யப்பட்ட தேசிய பட்ஜெட் இதுவாகும் என்றும் அன்வார் வர்ணித்தார்.

உதவித் தொகை குறித்து கருத்துரைத்த பிரதமர், இந்த வரவு செலவுத் திட்டத்தில் உதவித்தொகை தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளதோடு இந்த நோக்கத்திற்காக 8,100 கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.


Pengarang :