NATIONAL

பிளாக்பெர்ரி, மலேசியாவுடன் இணைந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும்

கோலாலம்பூர், அக் 17 – மென்பொருள் மற்றும் இணைய பாதுகாப்பு தீர்வுகளை வழங்கும் கனடாவின் முன்னணி நிறுவனமான பிளாக்பெர்ரி, மலேசியாவுடன் இணைந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது.

நேற்று பிற்பகல் பிளாக்பெர்ரி சைபர் செக்யூரிட்டி யின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஜான் ஜியான்மேட்டியோவுடன், மலேசியாவுக்கான கனடா உயர் ஸ்தானிகர் வெய்ன் ராப்சன், மரியாதை நிமித்தமாகச் வருகை புரிந்த போது இந்தத் தகவல் தனக்குத் தெரிவித்ததாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

மலேசியன் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் மல்டிமீடியா கமிஷன் (எம்சிஎம்சி) தலைவர் டான்ஸ்ரீ முகமட் சலீம் ஃபதே டின் மற்றும் தேசிய சைபர் செக்யூரிட்டி ஏஜென்சி (NACSA) தலைமை நிர்வாகி டாக்டர் மெகட் சுஹைரி மெகட் தாஜுடின் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

நிதியமைச்சராக இருக்கும் அன்வார், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் முதல் பிளாக்பெர்ரி சைபர் செக்யூரிட்டி சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் திறக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக ஜியான்மேட்டியோ தெரிவித்ததாக முகநூல் பதிவில் தெரிவித்தார்.

“வெளிநாட்டு தரப்புகள் கொண்டு வர விரும்பும் வாய்ப்புகளைத் திறந்து, தரமான முதலீடுகளை எளிதாக்க மலேசியாவின் நிலைப்பாட்டை நான் தெரிவித்தேன்.

“பொருளாதாரத்தைக் கட்டமைப்பதில் ஒற்றுமை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் அர்ப்பணிப்பு மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகள் அதிக வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆர்வத்தை ஈர்க்கும் கன எதிர்பார்க்க படுகிறது.

– பெர்னாமா


Pengarang :