NATIONAL

முஸ்லீம் அல்லாதோர் திருமணங்களை உள்துறை அமைச்சர் பதிவு செய்ய சட்டம் 164 அனுமதிக்கிறது

கோலாலம்பூர், அக் 26- சிவில் திருமணங்களைப் பதிவு செய்வதற்குப் பொறுப்பானவர் என்ற முறையில்   முஸ்லீம் அல்லாத தம்பதிகளின் திருமணத்தை  பதிவு செய்ய 1976ஆம் ஆண்டு சட்டச் சீர்திருத்தச் (திருமணம் மற்றும் விவாகரத்து) சட்டம் (சட்டம் 164) உள்துறை அமைச்சருக்கு அனுமதியளிக்கிறது என்று  தேசிய பதிவுத் துறை (என்.ஆர்.டி.) தெரிவித்துள்ளது. .

சிவில் திருமணங்களைப்  பதிவு செய்வதற்கும், முஸ்லீம் அல்லாத திருமணங்கள் மற்றும் விவாகரத்து பற்றிய தகவல்களை பதிவு செய்வதற்கும் பொறுப்பான அமைப்பாக அது விளங்குகிறது என்று அத்துறை அறிக்கை ஒன்றில் கூறியது.

சட்டம் 164 இன் அடிப்படையில் சிவில் திருமணங்களை பதிவு செய்வதற்கு பொறுப்பான அமைச்சராக உள்துறை அமைச்சர் இருக்கிறார்.  முஸ்லீம் அல்லாத தம்பதிகளின் திருமணங்களை பதிவு செய்ய இச்சட்டம் அவருக்கு  அனுமதியளிக்கிறது என்று அத்துறை தெரிவித்தது.

அத்தகைய பதிவுகளைச் செய்ய தேசியப் பதிவுத் துறையின் தலைமை இயக்குநர், திருமணம் மற்றும் விவாகரத்து பிரிவு இயக்குநர், மாநில பதிவுத் துறை இயக்குநர்கள், பிரிவின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும்  அதிகாரம் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று காலை புத்ராஜெயா பதிவுத் துறை  அலுவலகத்தில் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் முஸ்லிம் அல்லாத தம்பதியினரின் சிவில் திருமணத்தை பதிவு செய்வதைத் சித்தரிக்கும்  காணொளி வைரலானதைத் தொடர்ந்து அத்துறை இந்த விளக்கத்தை அளித்துள்ளது.


Pengarang :