NATIONAL

கடல் பெருக்கு, போர்ட் கிள்ளான் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்

ஷா ஆலம், அக் 26: அக்டோபர் 27 முதல் நவம்பர் 1 வரை கணிக்கப்பட்ட கடல் பெருக்கு  மற்றும் உயர் அலைகளின் நிகழ்வைத் தொடர்ந்து கடல் ஒரம் வாழும் பொதுமக்கள், குறிப்பாகப் போர்ட் கிள்ளானில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அக்டோபர் 28 (சனிக்கிழமை) மற்றும் 29 ஆம் தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) மாவட்டத்தில் கடல் மட்டம் 5.6 மீட்டர் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக கிள்ளான் மாவட்ட மற்றும் நில அலுவலகம் தெரிவித்துள்ளது.

பேஸ்புக் மூலம் பகிரப்பட்ட கிராஃபிக் தகவலின் அடிப்படையில், அக்டோபர் 27 (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.38 மணிக்குக் கடல் மட்ட அளவானது 5.3 மீட்டர் உயரத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

அக்டோபர் 30ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 6.36 மணியளவில் கடல் மட்டம் 5.5 மீட்டராகவும், அக்டோபர் 31ஆம் தேதி (செவ்வாய்கிழமை) காலை 7.08 மணிக்குக் 5.4 மீட்டராகவும் மற்றும் நவம்பர் 1ஆம் தேதி (புதன்கிழமை) காலை 7.38 மணிக்கு 5.1 மீட்டராகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“அதிக அலை நிகழ்வு அக்டோபர் 30 முதல் நவம்பர் 1 வரை போர்ட் கிள்ளானில் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“அது தொடர்பாக, (JPBD) அனைத்து கிள்ளான் குடிமக்களும் எப்போதும் விழிப்புடன் இருக்குமாறு கிள்ளான் மாவட்டப் பேரிடர் மேலாண்மைக் குழு நினைவூட்டுகிறது“.

பொதுமக்கள் எப்போதும் வானிலை நிலைமைகள் பற்றிய சமீபத்திய தகவல்கள் அறிந்திருக்க வேண்டும்.


Pengarang :