NATIONAL

பாலஸ்தீனத்திற்கு அமைதிப் படை- ஐ.நா.வின் முடிவுக்காக மலேசியா காத்திருக்கிறது

போர்ட்டிக்சன், அக் 27- பாலஸ்தீனத்திற்கு அமைதிப் படையை அனுப்புவது
தொடர்பில் ஐக்கியா நாடுகள் சபையின் (ஐ.நா.) முடிக்காக மலேசியா
காத்திருகிறது.

ஐ.நா. எடுக்கும் நிலைப்பாட்டின் அடிப்படையில் மலேசியா அவசரப்பட்டு
எந்த முடிவையும் எடுக்காது என்பதோடு இவ்விவகாரத்தில் மலேசிய
ஆயுதப்டையின் கருத்தும் கவனத்தில் கொள்ளப்படும் என்று தற்காப்பு
அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான் கூறினார்.

ஐ.நா.வின் கீழுள்ள தொகுதி சேரா நாடுகள் அமைப்பின் (நாம்) உறுப்பினர்
என்ற முறையில் மலேசிய இராணுவம் லெபனானில் உள்ள ஐ.நா.
இடைக்கால அமைதிப் படையின் கீழ் பணியாற்றியுள்ளதாகவும் அவர்
தெரிவித்தார்.

லெபனானில் 800க்கும் மேற்பட்ட மலேசிய வீரர்கள் பணியில் இருந்தனர்.
இது தவிர சோமாலியா மற்றும் இதர ஆப்பிரிக்க நாடுகளிலும் சில
அதிகாரிகள் பணியில் ஈடுபட்டனர். எனினும் அந்த எண்ணிக்கை
லெபனான் அளவுக்கு அதிகமானதாக இல்லை என்றார் அவர்.

ஆகவே, ஐ.நா. உறுப்பு நாடு என்ற முறையில் அந்த உலக அமைப்பின்
முடிவுக்காக நாம் பொறுத்திருந்த பார்க்க வேண்டும். இதுதவிர, அந்த
அமைதிப் படையில் மலேசியா பங்கேற்க வேண்டுமா என்பது குறித்தும்
நாம் பரிசீலிக்க வேண்டும். நாம் அவசரகதியில் அமைதிப் படையினரை
அங்கு அனுப்ப முடியாது என்றார் அவர்.

நேற்று இங்கு 536 இராணுவ வீரர்கள் மற்றும் அவர்கள் வாரிசுகளுக்கு
பி.ஜே.எம். (பிங்காட் ஜாசா மலேசியா) விருதுகளை வழங்கும் நிகழ்வுக்கு
தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத்
தெரிவித்தார்.

பாலஸ்தீனர்களுக்கு உதவுவதற்காக இராணுவத்தை அனுப்ப அரசாங்கம்
மறுப்பதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ரஹிம் அண்மையில் நிராகரித்தார்.

இராணுவத்தை அனுப்புவது அவ்வளவு எளிதான காரியமல்ல என்றும்,
அதற்கு பாலஸ்தீனத்தின் அண்டை நாடுகளின் அனுமதி பெறப்பட
வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.


Pengarang :