SELANGORYB ACTIVITIES

தீபாவளியை முன்னிட்டு  சட்டமன்ற உறுப்பினர் புவா   முறுக்கு சுட்டு சிறப்பித்தார்

சுங்கை பூலோ.அக்.28-  தீபாவளியை முன்னிட்டு  புக்கிட் லஞ்சான் சட்டமன்ற தொகுதியில் உள்ள இந்தியர்களுடன் முறுக்கு சுட்டு அசத்தினார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புவா பெய் லிங்.

ஒரு சீன பெண்மணியான சட்டமன்ற உறுப்பினர், இதற்கு முன்பு முறுக்கு சுட்ட அனுபவம் கிடையாது. பிசைந்து வைத்த முறுக்கு மாவை எப்படி முறுக்கு அச்சிக்குள் போடுவது, பின்னர் எப்படி பிடித்து முறுக்கு புளிய வேண்டும் என்பதை முறுக்கு புளியும் நிகழ்வில் கலந்துக் கொண்ட இந்திய பெண்களிடமிருந்து கற்றுக்கொண்டு, முறுக்கு சுட்டு எடுத்தார்.

அவர்கள் சொல்லிக் கொடுத்தது போன்று முறுக்கு புளிந்தார். பின்னர் அதை பதமாக எடுத்து எண்ணை சட்டியில் எண்ணை தெறிக்க வண்ணம் போட்டார். பின்னர் முறுக்கு முறையாக வெந்த பின்னர் எடுத்து வைத்தார்.

அனைத்து முறுக்குகளும் தொகுதியில் உள்ள வசதி குறைந்த இந்திய குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப் படவிருக்கிறது.


Pengarang :