NATIONAL

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 4,994 பகடிவதை சம்பவங்கள் நடந்துள்ளன

ஷா ஆலம், நவ 1: இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மொத்தம் 4,994 நடந்துள்ளன என்று துணைக் கல்வி அமைச்சர் கூறினார்.

2021 முதல் 2023 வரை இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மலேசிய கல்வி அமைச்சகத்தின் மாணவர் அடையாள அமைப்பின் (KPM) தரவைக் குறிப்பிட்ட லிம் ஹுய் யிங் விளக்கினார்.

“நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (MCO) காரணமாக 2021 ஆம் ஆண்டு பகடிவதை சம்பவங்கள் 326ஆக இருந்த நிலையில் 2022 இல் 3,887ஆகக் அதிகரித்தது.

“இந்த வழக்குகள் அனைத்திற்கும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் மூலம் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.

டத்தோ முஹம்மது பக்தியார் வான் சிக்கின் (ஹராப்பான்-பாலிக் புலாவ்) கேள்விக்குப் பதிலளித்த ஹுய் யிங், பகடிவதை வழக்குகள் தொடர்ந்து அதிகரித்தால், கவுன்சிலிங் ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கல்வி அமைச்சு உத்தேசித்துள்ளதாக கூறினார்.

“அவர்கள் ஏன் பகடிவதையில் ஈடுப்படுகிறார்கள் என்பதை அறிய அவர்களுக்குச் சரியான விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்பட வேண்டும்,” என்று ஹுய் கூறினார்.


Pengarang :