NATIONAL

சிலாங்கூர் பட்ஜெட் 2024 யை இறுதி செய்வதற்கான கேள்வி அங்கத்தில் பங்கேற்கப் பொதுமக்களுக்கு அழைப்பு

ஷா ஆலம், நவ 1: சிலாங்கூர் பட்ஜெட் 2024 யை இறுதி செய்வதற்கான கேள்வி அங்கத்தில் பங்கேற்கப் பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள்.

பொதுமக்கள் சிலாங்கூர் மாநில கருவூலத்தின் அதிகாரப்பூர்வப் போர்டல் https://pwn.selangor.gov.my/soal-selidik-belanjawan-selangor-tahun-2024/ இணைப்பின் மூலம் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.

“சிலாங்கூர் பட்ஜெட் 2024 இன் கட்டமைப்பில் உங்கள் கருத்துகளையும் பரிந்துரைகளையும் பகிர்ந்து கொள்ள அழைக்கப்படுகிறீர்கள்.

மாநில கருவூலத்தின் அதிகாரப்பூர்வப் போர்டல் ஆகஸ்ட் 18 முதல் நவம்பர் 30 வரை திறந்திருக்கும்.

நவம்பர் 10 ஆம் தேதி சிலாங்கூர் மாநில சட்டமன்ற (டிஎன்எஸ்) அமர்வில் சிலாங்கூர் பட்ஜெட் 2024 யை டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தாக்கல் செய்ய உள்ளார்.

இந்த ஆண்டு மாநில வரவுசெலவுத் திட்டத்திற்காக மொத்தம் RM2.45 பில்லியன் அங்கீகரிக்கப்பட்டது.


Pengarang :