NATIONAL

உயர் மதிப்பு கொண்ட பொருள்களுக்கு அடுத்தாண்டு மே மாதம் முதல் வரி- அரசாங்கம் முடிவு

கோலாலம்பூர், நவ 2 – உயர் மதிப்பு கொண்டு பொருள்களுக்கு அடுத்தாண்டு
மே மாதம் முதல் தேதி தொடங்கி வரி விதிக்கப்படும் என நிதியமைச்சு
கூறியுள்ளது.

இந்த வரி விதிப்பு தொடர்பான கொள்கையை இறுதி செய்யும் பணியில்
தாங்கள் ஈடுபட்டு வருவதாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு
பதிலளிக்கையில் அமைச்சு தெரிவித்தது.

இந்த பரிந்துரைக்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்தவுடன் வரி
விதிப்பு முறை, வரி விதிக்கப்படவுள்ள பொருள்களின் விபரம் மற்றும்
வரியின் அளவு குறித்து அறிவிக்கப்படும் என அது குறிப்பிட்டது.

உயர் மதிப்பு கொண்டு பொருள்களுக்கு 5 முதல் 10 விழுக்காடு வரை வரி
விதிக்கப்படும் என்று கடந்த மாதம் 2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்
திட்டத்தை தாக்கல் செய்த போது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
கூறியிருந்தார்.

எனினும், வரி விதிப்புக்கு உட்படும் உயர் மதிப்பு கொண்ட பொருள்கள்
எவை என அவர் தெளிவுபடுத்தவில்லை. உயர் மதிப்பு கொண்டு
பொருள்களுக்கு வரி விதிப்பது தொடர்பான பரிந்துரை கடந்த வரவு
செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டது.


Pengarang :