இரயில் மோதி 14 மாடுகள் மடிந்தன- 336 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்

குவாந்தான், நவ 3- தண்டவாளத்தில் நுழைந்ததாக சந்தேகிக்கப்படும் 14 மாடுகள் இரயில் மோதி மடிந்தன. இச்சம்பவம் பெரா, பகாங்-திரியாங் நிலையங்களுக்கு இடையே, 84.50வது கிலோ மீட்டரில் நேற்று முன்தினம் நிகழ்ந்தது.

விடியற்காலை 3.10 மணியளவில் நிகழ்ந்த இவ்விபத்தில் இரயில் ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை என்று பெரா மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் ஜூல்கிப்ளி நாசீர் கூறினார்.

இந்த விபத்தில் அனைத்து 14 மாடுகளும் மடிந்ததாகக் கூறிய அவர், எட்டு பெட்டிகள் கொண்ட அந்த இரயிலில் இயந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் சேதம் ஏற்பட்டது என அவர் தெரிவித்தார்.

இத்தகைய சம்பவங்கள் இப்பகுதியில் நிகழ்வது புதிதல்ல. கடந்த அக்டோபர் மாதம் 31ஆம் தேதி இதே இடத்தில் நிகழ்ந்த விபத்தில் ஐந்து மாடுகள் மடிந்தன என்று அவர் குறிப்பிட்டார்.

இது போன்றச் சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.


Pengarang :