SELANGOR

மாணவர்களுக்கு உதவும் மாநில அரசின் மின்-பற்றுச் சீட்டு திட்டம்- வாசிக்கும் பழக்கத்தையும் ஊக்குவிக்கிறது

உலு லங்காட், நவ 6- உயர்கல்விக்கூட மாணவர்களுக்கு மின்-புத்தகப்
பற்றுச்சீட்டுகளை வழங்கும் மாநில அரசின் நடவடிக்கை மாணவர்களின்
கற்றல் நடவடிக்கைகளுக்குக் குறிப்பாகப் புத்தகங்களை வாங்குவதில்
ஏற்படும் சுமையை பெரிதும் குறைக்கிறது.

தமது படிப்புக்குத் தேவையான வழிகாட்டிப் புத்தகங்களை வாங்க இந்த
பற்றுச் சீட்டுகள் மிகவும் உதவியாக உள்ளதாக மலேசிய அனைத்துலக
இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை மாணவரான கே.யுவராஜ்
பிள்ளை (வயது 21) கூறினார்.

இதற்கு முன்னர் மத்திய அரசிடமிருந்து இத்தகைய உதவி கிடைத்தது.
எனினும் மாநில அரசின் இந்த உதவியை நான் பெரிதும் போற்றுகிறேன்.
வரும் ஆண்டுகளிலும் இந்த திட்டம் தொடரும் என எதிர்பார்க்கிறேன்
எனறு அவர் சொன்னார்.

இங்குள்ள தேசிய பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற கித்தா
சிலாங்கூர் கல்வி வாக்குறுதி தொடக்க விழா மற்றும் உயர்கல்வி
மாணவர்களுக்கு மின்- பற்றுச்சீட்டுகளை வழங்கும் நிகழ்வின் போது அவர்
இவ்வாறு தெரிவித்தார்.

இதனிடையே, மாநில அரசின் இந்த நடவடிக்கை மாணவர்கள் மத்தியில்
வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கச் செய்யும் என்று சிலாங்கூர்
பல்கலைக்கழகத்தின (யுனிசெல்) மென்பொருள் பொறியியல் துறை
மாணவரான ஃபாத்தின் ஹவான் முகமது பாட்சில் (வயது 21) கூறினார்.

இந்த பற்றுச் சீட்டுகளை வழங்குவதற்கு இலக்கவியல் தளத்தைப்
பயன்படுத்துவது இலக்கவியலை ஊக்குவிக்கும் முயற்சிக்கு உத்வேகம்
அளிக்கும் என்பதோடு இலக்கவியல் உலகில் இ-வாலட் பயன்பாட்டையும்
அதிகரிக்கச் செய்யும் என்றார் அவர்.

உயர்கல்வி மாணவர்களுக்கான இந்த மின்-பற்றுச் சீட்டுத் திட்டத்தை
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று தொடக்கி வைத்தார்.
சுமார் இரண்டு லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டிலான இந்த திட்டம் மூலம்
1,000 மாணவர்கள் பயன் பெறுவர்.


Pengarang :