SELANGOR

பிங்காஸ் உதவி திட்டத்தின் நிலை மேம்படுத்தப்பட வேண்டும் – மேரு சட்டமன்ற உறுப்பினர்

ஷா ஆலம், நவ 17: ஆண்டுக்கு RM3,600 என்கிற பிங்காஸ் உதவி திட்டத்தின் நிலை மேம்படுத்தப்பட வேண்டும், இதனால் அதிகமான மக்கள் பலன் அடைவார்கள் என மேரு மக்கள் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

கோவிட் -19 தொற்றுநோய் க்குப் பிறகு மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை உணர்ந்ததைத் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் RM300 உதவி வழங்க மாநில அரசு முன்முயற்சி எடுத்ததாக மரியம் அப்துல் ரஷீத் கூறினார்.

“இந்த திட்டத்தின் பலன்களை முழு குடும்பமும் அனுபவிக்கும் வகையில் மாநில அரசு ஒரு உள்ளடக்கிய அணுகுமுறையை மேற்கொள்கிறது. அத்திட்டத்தின் உதவித் தொகை 2021 இல் RM200ஆக இருந்த நிலையில் 2022 இல் RM300 ஆக உயரத்தப் பட்டது.

“2024 ஆம் ஆண்டிற்கான பிங்காஸைத் தொடர்ந்து வழங்குவதற்கு டத்தோ மந்திரி புசார் அவர்களுக்கு நன்றி, ஆனால் இதுவரை பிங்காஸ் உதவியைப் பெறாத நபர்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டும்,” என இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்ற அமர்வில் கூறினார்.

சட்ட மசோதா 2024 பற்றி விவாதிக்கும் போது, மாநில அரசு பிங்காஸுக்கு விண்ணப்பிக்க, மாற்றுத் திறனாளிகளின் குடும்பத் தலைவர்கள், குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் சிறப்புக் குழந்தைகளைக் கொண்ட பெற்றோருக்கு ஒதுக்கீட்டை உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

சிலாங்கூர் பட்ஜெட் 2024 ஐ முன்வைக்கும் போது, RM108 மில்லியன் ஒதுக்கீட்டில் பிங்காஸ் அடுத்த ஆண்டு தொடரும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

பொருளாதார சவால்களால் பாதிக்கப் பட்டுள்ள மாநிலத்தில் உள்ள குடும்பங்களுக்கு மன உறுதியை அதிகரிக்க வேண்டியதன் காரணமாக இந்த திட்டம் தொடரப்பட்டது என்றார்.


Pengarang :